பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/695

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

687


தோன்றாது அவ்வான்மாவாய் ஒற்றித்து உயிர்க்குள் அடங்கி

நின்றாற் போலப் பாசப்பிணிப்பின் நீங்கிச் சுத்தனாகிய ஆன்மா தன்முனைப்பற்று முதல்வனோடு அடங்கித் தன் செயலற அம்முதல்வன் செயல்வழி ஒழுகவே மலம் மாயை என்ற இரண்டினோடு வலிய கன்மமும் இல்லையா யொழியும்” என்பது இதன்பொருள்.

"தானென்றவனென் றிரண்டுந் தனிற்கண்டு

தானென்ற பூவை அவனடி சாத்தினால்’ (1807)

எனவரும் திருமந்திரத் தொடரைப் பின்பற்றியமைந்தது,

“தம்மிற் சிவலிங்கம் கண்டதனைத் தாம்வணங்கித்

தம்மன்பால் மஞ்சனநீர் தாமாட்டித் - தம்மையொரு பூவாகப் பூவழியா மற்கொடுத்துப்பூசித்தால் ஒவாமை யன்றே யுளன்” (44)

எனவரும் திருக்களிற்றுப்படியாராகும்.

ஞானகுரு தரிசனத்தால் உண்டாகும் பயன் இதுவென உணர்த்துவது,

“கருடன் உருவங் கருதுமளவிற்

பருவிட்ந் தீர்ந்து பயங்கெடு மாபோல் குருவின் உருவங் குறித்தஅப்போதே திரிமலந்தீர்ந்து சிவனவ னாமே” (2659)

என வரும் திருமந்திரமாகும். "மந்திர வுருவினதாகிய கருடனது வடிவினை மாந்திரிகன் தனது வடிவாக ஒன்றித் தியானிக்கு மளவிற் பெரிய நஞ்சு தீர்ந்து மரணபயங் கெட்டொழியுமாறு போன்று, குருவின் திருமேனியைக் கண்டு தியானித்த அப்பொழுதே மும்மலவழுக்கு தன்னை விட்டு நீங்க அம்மாணவன் சிவமாந்தன்மையினையடைந்து இன்புறுவன்’ என்பது இதன்பொருளாகும்.

கருட தியானத்தால் விடம் நீங்க மரணபயந்தவிர்தல் போன்று குருவைத் தரிசித்துச் சிவமாகத் தியானிக்கும் பாவகத்தால் மும்மலம் நீங்கச் சிவனுடன் அத்துவிதமாந்