பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/699

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

691


புலப்படுத்துவதாகும்.

“மூலமலத்தின் காரியம் மோகம், மதம் முதலாயின. இருவினையின் காரியம் இன்பதுன்பம் முதலாயின. மாயையின் காரியம் தனுகரணம் முதலாயின. வள்ளலால் ஆம். எனவே திரோதான சத்தியது உண்மையும் பெற்றாம். அது, பாகம் வருவித்தற் பொருட்டு மலத்தின்வழி நின்று மோகம் முதலியவற்றைத் தொழிற்படுத்துவதாகிய சிவ சங்கற்பத்திற்கு ஏதுவாதல் பற்றி, மலம் என்று உபசரித்துக் கூறப்படும். இவ்வாறு மலம், கன்மம், மாயை, திரோதானம், மாயாகாரியம் என்னும் ஐவகைப் பாசமுங் கண்டுகொள்க’ என விளக்குவர் சிவஞானமுனிவர்.

ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களுடன் ஆணவமலத்தைப் பரிபாகஞ் செய்யும் இறைவனது சத்தியாகிய திரோதான சத்தியையும் மாயையின் காரியங்க ளாகிய மாயேயத்தையும் சேர்த்து மலம் ஐந்து எனக் கூறும் மரவு திருமூலநாயனார் காலத்திலேயே நிலைபெற்றிருந்த தென்பது, மாறா மலம் ஐந்தால் (திருமந்திரம் 2160) எனவும், நேராமலம் ஐந்து (திருமந்திரம் 2166) எனவும், வணங்கிடும் ஐம்மலம் (திருமந்திரம் 2177) எனவும் ஐம்மலந் தான்விட்டு’ (திருமந்திரம் 2207) எனவும், ஒத்துறுபாசம் மலம் ஐந்தோடாறாறு, தத்துவபேதம் (திருமந்திரம் 221) எனவும், 'நந்திபராவத்தை நாடச் சுடர்முனம், அந்தியிருள் போலும் ஐம்மலமாறுமே (திருமந்திரம் 2293) எனவும் வரும் திருமந்திரப் பாடல்களால் இனிது புலனாகும். இங்குக் குறித்த ஐவகைமலங்களையும் விரித்து விளக்கும் முறையில்

அமைந்தது,

“மோகமிக உயிர்கள்தொறும் உடனாய்நிற்கும்

மூல ஆணவம் ஒன்று, முயங்கி நின்று

பாகமிகவுதவு திரோதாயி ஒன்று

பகர்மாயை ஒன்று, படர்கன்மம் ஒன்று

தேகமுறு கரணமொடு புவனபோகச்

செயலாருமாமாயைத் திரட்சி ஒன்றென் (று)

ஆகமலம் ஐந்தென்பர். ஐந்தும் மாறா

தருளென்ப தரிதென்பர் அறிந்துளோரே' (32)