பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/709

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

701


எனவரும் சிவஞான சித்தியாராகும். இது,

"வேதமோ டாகமம் மெய்யாம் இறைவனுால்,

ஒதும் பொதுவுஞ் சிறப்புமென்றுன்னுக நாதன் உரையிவை நாடில் இரண்டந்தம் பேதம தென்பர் பெரியோர்க் கபேதமே” (2397)

எனவரும் திருமந்திரத்தையும்,

"உலகியல் வேதநூல் ஒழுக்க மென்பதும் நிலவுமெய்ந்நெறிசிவ நெறிய தென்பம்’

(பெரிய திருஞானசம்பந்தர்)

எனவும்,

"வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்க”

(பெரிய திருஞானசம்பந்தர், )

எனவும் வரும் திருத்தொண்டர் புராணத் தொடர்களையும் விரித்துரைக்கும் முறையில் அமைந்துள்ளமை அறியத் தகுவதாகும்.

வேதாந்தம் முதலிய ஆறு அந்தங்கள் (சமயதத்துவக் கொள்கைகள்) திருமூலர் காலத்தில் இந்நாட்டில் வழங்கின. எனினும் அவற்றுள் சைவசித்தாந்தக் கொள்கையே தனிச் சிறப்பு வாய்ந்ததாகத் தமிழ்மக்களாற் போற்றப்பெற்று வந்தது என்பது வேதத்தின் அந்தமும் மிக்க சித்தாந்தமும்’ எனவும்

"சித்தாந்தத்தே சிவன் முத்தி சித்தித்தலால்

சித்தாந்தத்தே நிற்பர் முத்தி சித்தித்தவர்” (2394)

எனவும் வரும் திருமூலர் வாய்மொழிகளால் நன்கு தெளியப்படும்.

“சித்தாந்தத் தேசிவன்றன் திருக்கடைக்கண் சேர்த்திச்

செனனமொன்றி லேசீவன் முத்தராக வைத்தாண்டு மலங்கழுவி ஞான வாரி

மடுத்தானந்தம்பொழிந்து வரும்பிறப்பையறுத்து