பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/775

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

766

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


தானே வந்தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான் ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே”

(திருவாசகம்)

எனத் திருவாதவூரடிகளும் அருளிய பொருளுரைகள் இங்கு எண்னத்தக்கனவாகும். .

ஆன்மா தன்னியல்பினை உள்ளவாறு அறிதற்கும் இறைவனைது அருள் ஞானம் கைவரப்பெறுதல் வேண்டும் என அறிவுறுத்துவது,

"நானார் என்னுள்ளமார் ஞானங்களார் என்னையாரறிவார்

. . . . 姆 * s ?? வானோர்பிரான் என்னையாண்டிலனேல்

(திருக்கோத்தும்பி)

எனவரும் திருவாசகமாகும். இதன்பொருளை விரித்து விளக்கும் முறையில் அமைந்தது திருவெண்காட்டடிகள் அருளிய திருவிடை மருதூர் மும்மணிக்கோவையில் மேவிய புன்மயிர்த்தொகையோ எனத்தொடங்கும் பதின்மூன்றாந் திருப்பாடலாகும். உயிர் எவ்வியல்பினது என ஆராயப் புகுந்து தத்துவசோதனை செய்து தம்மியல்பினை உணரப் பெறாது வருந்திய அடிகள், இறைவனது திருவருளையே கண்ணாகக் கொண்டு நோக்கிய நிலையில் உயிராகிய தம்மையும் உயிர்க்குயிராகிய இறைவனையும் உணரப்பெற்ற திறத்தை விரித்துரைப்பது இத்திருப்பாடலாகும். உடலிற் பொருந்திய மயிர்த்தொகுதியோ அதற்கிடமாய தோலின் பரப்போ, தோலினிடையே வைத்துப் பொதியப் பட்ட புண்னோ புண்ணிடையூறும் உதிரப்புண்லோ அவற்றிடை யே கூறுசெய்து நிற்கும் எலும்போ, எலும்பிடை முடை நாற்றத்துடன் பொருந்திய மூளைவிழுதோ, வழுவழுப் புடையதாய் உள்ளேயொழுகும் வழும்போ, மெதுவாகச் சென்று ஊரும் புழுவாகிய கிருமிகளின் வரிசையோ, நீரிடையே வைத்த மலக்குவையோ, உடலுறுப்புக்களை இணைத்துக்கட்டிய நரம்பாகிய கயிறோ, உடற்குள் நின்று பிரியாது வருத்தும் பிணியோ தெரியாது இவற்றுள் இன்னதுயான் என்று அறிந்திலேன். ஆன்மா வாகிய என்னை மேற்கூறியவாறு உடற்பகுதிகள் எங்குந் தேடிப் பார்த்தேன்.