பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/839

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

830

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


எனவரும் சேக்கிழார் வாய்மொழியினை அடியொற்றி யமைந்திருத்தல் காணலாம்.

ஆன்மா சிவத்தோடும் கூடும் நிலையில் ஒன்றாகி, ஆன்மாவென்னும் அப்பொருள் கெட்டழிவதுமில்லை, உயிரும் சிவமும் என இரண்டாகிப் பிரிந்து வேறுபடுவதும் இல்லை. இரண்டற்ற நிலையில் (அத்துவிதமாய்) நின்று அதுபவிக்கும் என்பதனை,

“ஒன்றாலும் ஒன்றா திரண்டாலும் ஓசையெழா
தென்றாலொன் றன்றிரண்டுமில்” (75)

எனவரும் திருவருட்பயனில் உமாபதி சிவம் இனிது விளக்கியுள்ளார். சைவ சித்தாந்தம் கூறும் முத்தி நிலை பற்றிய இவ்விளக்கம்,

“நண்ணரிய சிவானந்த ஞானவடிவேயாகி
அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்ட அரசமந்திருந்தார்”

(பெரிய திருநாவுக். 427)

எனவும்,

"காதலியைக் கைப்பற்றிக்கொண்டுவலங்கொண்டருளித்
தீதகற்ற வந்தருளுந் திருஞான சம்பந்தர் நாதனெழில் வளர்சோதி நண்ணியதனுட் புகுவார் போதநிலை முடிந்தவழிப்புக்கொன்றி யுடனானார்”

(பெரிய சம்பந்தர். 1253)

எனவும் அருண்மொழித்தேவர் கூறிய வீடுபேற்றியல்பினை விளக்கும் முறையில் அமைந்திருத்தல் காணலாம்.

   இதுகாறும் எடுத்துக்காட்டியவற்றால் சைவத் திருமுறைகள் பன்னிரண்டினையும் சிவஞானபோதம் முதலிய மெய்கண்ட நூல்கள் பதினான்கினையும் ஒப்பு நோக்கி ஆராயுமிடத்து சிவஞானபோதம் முதலிய சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் பொதுவாக உலகப் பொதுமறையாகிய திருக்குறளையும் வேதசிவாகமக் கருத்துக்களையும் தழுவியனவாய்ச் சிறப்பாகச் சைவத்