பக்கம்:சொன்னார்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

107


வேறு வழி எதுவும் இல்லை என்ற நிலையில்தான் “ராணுவ ஆட்சி” என்ற பிரச்னை தோன்ற முடியும். ஜனதிபதியோ அல்லது பிரதம மந்திரியோ முடிவு செய்து ராணுவ ஆட்சியைக் கொண்டு வந்துவிட முடியாது. மக்களே விரும்பி அவர்களை தக்க நடவடிக்கை எடுத்தால்தான் ராணுவ ஆட்சி வரமுடியும்.

—பி. பி. குமாரமங்கலம்

(இந்தியாவின் முன்னாள் தளபதி)


ஜாதி அடிப்படையிலான சமூக அமைப்பு, பார்லிமெண்டரி ஜனநாயகத்தின் அடிப்படையிலான அரசியல் அமைப்பு, முதலாளித்துவ அடிப்படையிலான பொருளாதார அமைப்பு ஆகிய மூன்றும் நீடிக்கும் வரையில் எந்த அரசாங்கத்தினாலும் ஊழலை ஒழிக்கமுடியாது. நமது வேதங்களும் உபநிஷத்துக்களும்கூட ‘சொத்து சேர்க்கக் கூடாது’ என்று கூறுகின்றன. ஆனல் உண்மையில் யார்தான் அதனைப் பின்பற்றுகிறார்கள்?

—தேவராஜ் அர்ஸ் (23-3-1975)

(கர்நாடக முதல்வர்)


தங்கமோ, நகையோ, உற்பத்தி ஆற்றல் அற்றவை, பலனற்றவை. அவற்றை அணிவதெல்லாம் வெறும் பெருமைக்காகத்தான்.

—தாரகேஸ்வரி சின்கா (18-9-1960)

(மத்திய துணையமைச்சர்)


நான் வேதத்தைப் படித்திருக்கிறேன். அதில் நமது ஞானத்தை விருத்தியாக்குதற்கு ஒன்றுமே சொல்லவில்லை. மற்றும், நாம் தெரிந்து கொள்ளுதற்குரிய சிலாக்கியமான விஷயங்கள் ஒன்றுமேயில்லை என்றும் நான் தெரிந்து கொண்டேன்.

—சர். கே. வி. ரெட்டி (15-4-1927)

(கோவையில், மூன்றாவது அகில இந்திய நாயுடுமார் மாநாட்டில் பேசியது)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/109&oldid=1016062" இலிருந்து மீள்விக்கப்பட்டது