பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

சொன்னால் நம்பமாட்டீர்கள்


துவங்கியிருக்கிறோம். அதில்தான் தாங்கள் நடிக்கும் படத்தை எடுக்க முடிவுசெய்திருக்கிறோம். என்று சொன்னோம்.

எம்.ஜி.ஆர். மகிழ்ச்சியடைந்து மிகவும் குறைந்த சம்பளத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டு.“எனக்கு படங்கள் அதிகமிருக்கிறபடியால் ஆறு மாதத்திற்கு அவைகளுக்கெல்லாம் கால்ஷீட் கொடுத்துவிட்டேன்.

ஆனால் ‘கால்ஷீட்’ நேரம் பூராவும் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணிவரைதான் கொடுத்திருக்கிறேன். அதனால் தினமும் மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணிவரை சூட்டிங் நடத்தினால் படத்தைச் சீக்கிரம் முடிக்கலாம்.

அதற்குத் தகுந்தாற்போல நடிகர் நடிகைகளை போட வேண்டும். குறிப்பாக கதாநாயகியை புதுமுகமாகப் போட்டால்தான் நம் செளகரியம் போல் சூட்டிங் நடத்தலாம்” என்று சொன்னார்.

நான் அப்போது திரு. பி.ஆர். பந்தலு அவர்களின் பத்மினி பிக்சர்ஸ் கம்பெனியில் ‘தங்கமலை ரகசியம்’ என்ற திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தேன். தங்கமலை ரகசியம் எனது கதையாதலால் என்னைக் கூடவே திரு.பி.ஆர். பந்தலு வைத்துக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் சென்னைக் கடற்கரையில் தனிமையாக உட்கார்ந்து கொண்டிருந்தேன். அப்போது அங்கு டைரக்டர் திரு. சுப்ரமணியம் அவர்களின் புதல்வி பத்மா சுப்ரமணியம் வந்தார். அவர் கூடவே ஒரு பெண்ணும் வந்தாள்.

என்னைக் கண்டதும் பத்மா அங்கேயே உட்கார்ந்தார். பல விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டு வரும்போது நான் ‘தங்கமலை ரகசியம்’ என்ற திரைப்படத்துக்குக் கதை