பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

சொன்னால் நம்பமாட்டீர்கள்



மெதுவாகப் புத்தகத்தை எடுத்து ஒளித்துக் கொண்டு கம்பி நீட்டிவிட்டேன் நேராகப் பஸ் ஸ்டாண்டிற்குப் போய் ஊரை அடைவதற்குள் என் பாடு வியர்த்து விறுவிறுத்து விட்டது. வீட்டை அடைந்தவுடன் ஓர் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக்கொண்டு புத்தகத்தை ஒருமுறை பிரித்துப்பார்த்தேன். அதன் அட்டையில்

“அருமை நண்பர் சா.கணேசன் அவர்களுக்கு....

டி.கே.சி.

என்று எழுதியிருந்தது. அந்தப் புத்தகத்துக்கு உரியவருடைய பெயரையும் ஒரு முறை வாசித்தேன் அதை அப்படியே வைத்திருந்தால் நம்ம குட்டு வெளிப்பட்டு விடும், என்று பயந்து மேற்படி எழுத்துக்களை மிகவும் கஷ்டப்பட்டு அழித்தேன். பிறகு அதன் மேல் ஒரு வெள்ளைத் தாளை ஒட்டி அதில் என் பெயரை கொட்டை எழுத்தில் எழுதிப் புத்தகத்தைச் சொந்தமாக்கிய பின்பு தான் நிம்மதி உண்டாயிற்று,

அந்தப் புத்தகத்தை நான் எத்தனை தடவை படித்திருப்பேன் என்பதைக் கணக்கிடவே முடியாது!

இதய ஒலி செய்த வேலையோ அபாரம் என்று சொல்லலாம். தமிழ்க் கவிதைகளை, படித்தவர்களும் பாமரர்களும் அநுபவிக்கலாம் என்று அது சொல்லித் தந்தது. உண்மைக்கவிதை எது, போலிக்கவிதை எது, என்பதையும் இதய ஒலி எடுத்துக் காட்டிற்று.

கம்பன், கலிங்கத்துப் பரணி ஆசிரியர் மகாமகோபாத்யாய சாமிநாத ஐயர், வெள்ளக்கால் முதலியார், கவிமணி, பாரதியார்,