சொர்க்கவாசல் 125 வாலிபன் படுக்கை அருகே செல்கிறான் மதிவா ணன். வாலிபன் பதறி எழுந்து உட்கார்ந்து கொள்கிறான் படுக்கையில் மதிவாணன் சிரித்து விட்டு.) மதி: வீராதி வீரன் போல் பேசுகிறாய்- ஏன் திகில்? வாலி: (முகத்தில் அசடு வழிய) ஒன்றுமில்லை போய்ப் படுத்துக் கொள்ளுங்கள். [மதிவாணன் சட்டையைக் கலைத்தபடி) - மதி: தம்பி ! மேலங்கி, தலையணி இவைகளைக் களைந்துவிட்டுப் படுத்து உறங்கு. கொடு (அருகே சென்று} மேலங்கியை. வாலி : (மேலும் திகைத்து) வேண்டாம், வேண்டாம்! மதி: ஏன்? என்னப் தம்பி! உன் போக்கே விசித்திர மாக இருக்கிறது. [அருகே நெருங்கி வாலிபனின் மேலங்கியைக் களைய முற்பட, வாலிபன் பதறி, மதிவாணன் கரங்களை உதறியபடி.] வாலி: தொல்லையாகிவிட்டது இனி நான் வெளியே போய்விடுவேன். உங்கள் போக்கு. மதி: (கொஞ்சும் முறையில்) வேண்டாம், வேண்டாம்! இஷ்டம்போல், மேலங்கியுடனேயே படுத்துக் உன் கொள். பிடிவாதக்காரன். (இருவரும் எதிர் எதிர் படுக்கையில் படுத்துக் கொள்கின்றனர். ஒருவர் அறியாமல் ஒருவர் பார்ப்பதும், தூங்குவதுபோலப் பாசங்கு செய் வதுமாக உள்ளனர். வாலிபன் போக்கு மதி வாணனுக்குச் சந்தேகத்தை உண்டாக்குகிறது. வாலிபன் கையை வீசிக் கொள்கிறான் காற்றுக் கரக. ஆனால் மேலங்கியை களைய மறுக்கிறான். வாலிபன் முகத்திலே வியர்வை அரும்புகிறது. விசித்திரமான போக்காக இருக்கிறதே என்று மதிவாணன் யோசிக்கிறான்.)
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/125
Appearance