உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 127 தான் எனக்கு, அழகு மங்கையின் முக விலாசத்தைக் கண் டால் - புரிகிறதா? வாலி: (சிரித்தபடி) ஏன் புரியவில்லை. புலமை வள மாக இருக்கிறது, தங்களிடம். அது நன்றாகப் புரிகிறது. மதி: நம்பவில்லையா என் பேச்சை. பைத்யக்காரா! கருங்குழலிலே கார் மேகத்தைக் காண்கிறேன். இன்பவல்லி களின் இசையிலே குயிலையும், ஆடலிலே மயிலையும், விழி யிலே கெண்டையையும் காண்கிறேன். வாலி: காதலைத் தவிர மற்றதெல்லாம் காண்கிறீர்; மதி: உண்மைதான். வாலி: யார் நம்புகிறது இதை? இசை இருக்கிறது, இனிமையாக. மதி : எதற்கு? காதல் கீதம் பொழியத்தானா? வாலி: (அவன் பதிலைக் கவனியாமல்) இளமை, அரச சபையிலே இடம் என்றாலும் காதல் கணையைக் கண்டதே இல்லை -- நம்பவே முடியவில்லையே. [மதிவாணன் எழுந்து வாலிபன் படுக்கை அருகே சென்றபடி] மதி: (வேடிக்கையாக மிரட்டும் குரலில்) நம்ப... வாலி. முடியவில்லை. மதி: (அகுகே நெருங்கி) முடியவில்லையா? வாலிபன் படுக்கையில் இருந்தபடி, சிரிப்பை அடக்க முயற்சித்தபடி, இல்லை என்று தலை யசைத்து ஜாடை காட்ட, மதிவாணன் வாலிய னிடம் மிகவும் நெருங்கி அவன் தோளைப் பிடித்துத் தூக்க முயற்சித்துக் கொண்டே.) மதி: நம்ப.... முடியவில்லையா? வாலிபன் அவனைத் தள்ளி விட்டடடி...] வாலி: நம்புகிறேன்...நம்புகிறேன்.