130 சொர்க்கவாசல் பெண்: குமாரதேவியின் கட்டளைப்படி நான் மாறு வேடம் அனிந்து ஊரார் போக்கை அறிவது வழக்கம். இன்று தங்களைக் கண்டேன். கடமையை மறந்தேன். காதலில் கட்டுண்டேன். என் செயலைக் கண்டு செல்வமே! சீரழிவான குணம் எனக்கு என்று எண்ணி விடுவீரா? என்னை நம்ப வேண்டும், மணியே! நான் மாசற்றவள். மதி: (இரு கரத்தைப் பெண் நீட்டியது கண்டு கரங் களைப் பற்றிக் கொண்டு) தங்கம்! என் வாழ்வின் விளக்கே! மன்னன் திருமண விஷயமாக வந்தேன் - காதல்மணம் எனக் குக் கிடைத்து விட்டது. கனியே! உன் பெற்றோரைக் கண்டு பேசி... பெண்: சம்மதம் பெறுவது சுலபம் கண்ணாளா! ஆனால், இந்த விழா முடிந்த பிறகுதான் திருமணப் பேச்சு! விளக்கம் கேட்க வேண்டாம். தான் இனி உமது பொருள். என் வாழ்க்கைக்கு, நீரே இனி வழிகாட்டி. என் காதலைக் காணிக்கையாக்கிவிட்டேன். நான் யாராக இருப்பினும் செல் வமே! என்னால் தங்களுக்கு எவ்விதமான இன்னல் வந்தாலும் என்னை ஏற்றுக் கொள்ளும் உறுதி இருக்குமா? மதி: ஆழ்கடலில், அலை நிரம்பிய கடலில், சுறாவுக்கும் சுழலுக்கும் இடையேயுள்ள முத்து எடுக்கும் தமிழ் இனம் நான், தங்கமே! உன் உள்ளத்தில் எனக்கு இடம் உண்டு என்று நீ கூறியான பிறகு, உத்தமி!படை பல வரினும், தடை பல நேரிடினும், கலங்குவேனா? உன்னை என்னிடமிருந்து பிரிக்கும் வலிமை கொண்டவர் எவரும் இருக்க முடியாது, என் கரத்தில் வாளும், கருத்தில் நீயும் இருக்கும் வரையில். பெண்: என்னைக் களிப்புக் கடலில் தள்ளாதீர்,கண் ணானா! மதி: கலாதேவி! இனி நான் செய்ய வேண்டியது என்ன? கட்டளையிடு. பெண்: கட்டளையா? நானா? நான் தங்களைக் கேட் டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். மதி: என்ன அது, இன்பமே!
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/130
Appearance