சொர்க்கவாசல் 133 மதி: இன்பமே! என் கலைத் திறனைக் கண்டு அரசி, பரிசு தர வருகிறபோது... பெண்: வருகிறபோது... மதி: குமாரதேவியாரே! நான் கேட்கும் பரிசு தர வேண்டும் என்று கூறுவேன். பெண்: (குமாரி பேசும் பாவனையில்) கேள், கொடுக் கப்படும். ஆனால் முறையும் நெறியும் அறிந்து கேள்(சொந்த முறையில் பேச்சு) என்று எங்கள் அரசி கூறுவார்கள். ஏனெ றால், சில பிடிவாதக்காரர்கள், ராஜ்யத்தில் பாதியும், அரசகுமாரியும் வேண்டும் என்றுகூடக் கேட்டு விடுவார்க ளல்லவா? மதி: எனக்கு ஏன் புதிதாக ஒரு ராஜ்யம்-என் காதல் ராஜ்யத்துக்கு ராணியாக இருக்கும்படி தங்கத்தைத் தர வேண்டும் -- நான் விரும்பும் பரிசு அதுதான் என்று கூறு வேன். பெண்: நான் வெட்கத்தால் தலை குனிந்து கொண்டு நிற்பேன். மதி: அரசி, உன்னைப் பார்த்துப் பூரிப்படைவார்கள். பெண் : தாதிகளெல்லாம் கேலி பேசுவார்கள். மதி: வெற்றி வீரனான நான், நான் விரும்பும் பரிசு பெற்று வீடு செல்வேன். பெண்: வீடு சென்று,திலகாவிடம் என்னைத் தரு வீர்கள். மதி: அம்மா உன்னைக் கண்டதும்... பெண்: கண்டதும்.. மதி: (தாயார் பேசுவது போல) 'வாடி, என் கண்ணே* என்று அன்புடன் கூறி அவள் கரங்களைப் பிடித்து இழுத்து அணைத்துக் கொள்ளும் நிலையில்...) அணைத்துக் கொண்டு, உச்சி மோந்து முத்தமிடுவார்கள்.
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/133
Appearance