உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 சொர்க்கவாசல் திலகா (குறும்பாக) தவசியாரே! இன்னும் எவ்வளவு காலம் இந்தத் தபோவனத்தில் முத்து (திணறியபடி) வேலை நிரம்ப இருக்கிறது. திலகா வந்து விடுகிறேன் விரைவில். {ஏதோ கூச்சல் கேட்டு இருவரும் திடுக்கிட்டு கூச் சல் வந்த பக்கம் சென்று பார்க்கிறார்கள்...] வயதான ஒரு மாதும், இளமங்கையும் வருகிறார் கள். மங்கையைத் துரத்திப் பிடிப்பவள்போல வயதான மாது வருகிறாள்.... வ. மாது: கண்ணே! வேண்டாம்டி... இதோ பாரம்மா! [இளமங்கையை திலகா பிடித்து நிறுத்துகிறாள். இளமங்கை கண்ணீர் விடுகிறாள். மாதும் வந்து சேருகிறாள்.] திலகா : என்னம்மா, என்ன? வயதான வ.மாது: கொழ்ந்தை என் மக. உயிரைப் போக்கிக் கொள்ளப் போறேன்னு ஓடி வருது. நல்ல வேளை, நீங்க தடுத்து நிறுத்தினீங்க. திலகா : (இளமங்கையைப் பார்த்து) ஏன்? சாகத் துணிந்த காரணம் என்ன? (வயதான மாதைப் பார்த்து) என்னம்மா தகராறு? வ.மாது: என்ன தகராறு கிளம்பும்! கல்யாண விஷய மாத்தால். இ.மங்கை: (ஆத்திரமாக) கல்யாணமாம், கல்யாணம். என்னைப் படுகுழியிலே தள்ள ஏற்பாடு செய்துவிட்டு, பசப் பிப் பேசறியா? கேளம்மா நியாயத்தை- எனக்கு என்ன குறை? பெரிய அழகி இல்லை. ஆனா அவலட்சணமா நான், என்னை ஒரு நொண்டிக்குக் கல்யாணம் செய்து கொடுக்க? திலகா: (திடுக்கிட்டு) நொண்டிக்கா? [முத்துமாணிக்கம் கலக்கமடைகிறான்.)