உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 163 நண்: தங்கச்சிலை, திலகா! நான் இவ்வளவு அழகி என்று எண்ணவில்லை. முத்து: திலகா, எப்போதும் போலத்தான் என்னிடம் நடந்து கொண்டாள். நண்: அவளுக்கு என்ன தெரியும் உன் நிலைமை? முத்து: துளியும் தெரியவில்லை. ஆனால் என் மனம் தான் பட்படவென்று அடித்துக் கொண்டது. என் முகத்தை தன் முகத்தருகே கொண்டு போனாள். அப்போது பட்ட வேதனை நண்: பார்த்தேன், பலகணி வழியாக.. நான் (முத்துவின் முகத்தைக் கூர்ந்து பார்த்தபடி.. உண்மையாகவே அபூர்வமான வெற்றிதான் எனக்கு. துளியும் தெரியவில்லை. {முத்துவின் முகத்தில் மலர்ச்சியில்லை.) நீயோ, நானோ, மருத்துவரோ கூறினால் உண்டு; தானா கத் தெரிந்து கொள்ள முடியாது திலகாவால். முத்து:(பதறி) ஆனால், தெரிந்து விட்டால்? நண் : பதறுவாள்! பாவி, பாதகா என்று தூற்றுவாள். என்னையும் கூடத்தான். உலகம் உன்னையும் ஏசும்; என் னையும் ஏசும். திலகா, திகைத்துப் போவாள். முத்து: (அழுகுரலில்) நண்பா! அப்படிப் பேசாதே. என்னால் தாங்க முடியாது. நண்: அவளால் தாங்கிக் கொள்ள முடியுமா வேத னையை? எப்படி உலகிலே உலவுவாள். உலகம் என்ன எண்' ணும்? நினைத்தாலே பயமாக இருக்கிறது. முத்து: (பதறி) உண்மை! உண்மை! ஓராயிரம் தடவை கூறினேன் நான். தடுத்தாய், என் வாதத்தை. தது. நண்: ஆமாம்... இன்றுதான் உண்மையை உணர முடிந் B