சொர்க்கவாசல் 173 வெளியூரிலிருந்து ஒரு வைத்தியர் வருகிறார். மூலிகை தருகிறார். மூளைக் கோளாறு போய்விடுகிறது. ராணிக்கு. ஆமாம்.உடனே கோணங்கியை அடித்துவிரட்டுகிறாள்! கோணங்கி என்ன செய்கிறான்? 'நான் உன் கணவனல்லவா?' என்று கற்றுகிறான். கதறும்போது ராணி ஏளனம் செய்கிறாள். கோணங்கி நீ! ராணி நான். எனக்கு ஏற்றவனா நீ!' என்று பரிகாசம் செய்து அடித்து விரட்டுகிறாள் அவனை. ஊராரும், 'அதுதான் சரி' என்று கூறி, கோணங்கியை அடித்துத் துரத்துகிறார்கள் அல்லவா? ஆமாம். [பொம்மலாட்டம் முடிகிறது. மதிவாணன் வேத் னையாவ் கோபமடைகிறான். துணை அமைச் சர் கவனியாதவர் போலிருந்து விடுகிறார்] மதி: புரிகிறது அமைச்சரே! நன்றாகப் புரிகிறது.நாட கம், அதன் நோக்கம், எல்லாம் து. அமை: (திடுக்கிட்டவன் போலாகி) மதிவாணரே! என்ன ஒரு மாதிரியாகப் பேசுகிறீர்? மதி: சித்ரவதை செய்யப்படுகிறேன்--என்னால் தாங்க முடியாது. இவ்வளவு இழிவை, ஏளனத்தை. [துணை அமைச்சர் குறும்பாகப் பார்த்தபடி] து. அமை: எனக்கொன்றும் விளங்கவில்லை. வேதனை ஏன் உமக்கு? மதி: பட்டத்தரசியை இந்தப் பாவி மணம் புரிந்து கொண்டால் சித்ரவதைதான் கிடைக்கும் பரிசு. [வேதனையுடன் வெளியே ஓடுகிறான்--வேந்தன் முதலியோர் சிரிக்கின்றனர்.)
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/173
Appearance