- 176
சொர்க்கவாசல் மதி: திலகா திலகா! கேட்டாயா சேதியை? திலகா: (ஆவலுடன்) என்ன அண்ணா, கிறாரா? அரசி வரு மதி:உன் அண்ணி ஒரு நாட்டின் அரசி; அவளிடம் நாம் அடங்கிக் கிடப்போம் என்று பேசினார்களல்லவா, சில பித்தர்கள்? திலகா: பொறாமையால் பேசினார்கள்! மதி: நிலமையும் அதுதானே, திலகா! ஆனால், இனி அந்தக் களங்கமும் இல்லை, என் காதலிக்கு. திலகா-உன் அண்ணி- என் பொருட்டு அரசிப் பதவியை வேண்டாம் என்று கூறிவிட்டாள். திலகா (திடுக்கிட்டு) ஹா! மதி: முடி துறந்துண்டத் தீர்மானித்துவிட்டாள் (மதி வாணன் மகிழ்ச்சியுடன் திலகாவின் கரத்னதப்பிடித்திழுத்து) வா, திலகா. உன்னை இனியும் இங்கே இருக்கவிடப் போவதில்லை. திலகா: என்ன அண்ணா இது? மதி: (அவள் கன்னத்தைக் கிள்ளி) கள்ளி! ஒன்றுமே தெரியாது உனக்கு? திருமணம்! முதலில் உன் திருமணம்! பிறகுதான் எனக்கு. வா! (உள்ளே சென்று தராசைக்காட்டி) வர...உம்... நில் இப்படி! திலகா : இது ஒரு வேடிக்கை அண்ணா, உனக்கு. மதி: (தங்கக் கட்டிகளைப் போட்டு எடை பார்த்தபடி) வேடிக்கையா? எடைக்கு எடை தங்கம் என்னால் தரமுடி யாது என்றல்லவா எண்ணினான் சோமநாதன். (எடை பார்த்து மகிழ்ந்து) இதோ, எடைக்கு எடை தங்கம்! எடைக்கு மேலும் தங்கம்!
(திலகாவின் எடை அளவுக்குப் போக மீதமிருக்கும். தங்கக் கட்டிகளைக் காட்டி மகிழ்கிறான். திலகா வும் பூரிப்படைகிறாள்]