180 சொர்க்கவாசல் திலகா : எப்படித் தாங்குவேன்? எப்படியடி தாங்குவேன்? உயிரினும் மேலாக மதித்துவந்தேனே! அவரா திருமணம் கிடையாது என்றார்! ஏசினாரா? என்னையா? சோலை யிலே, சாலையிலே விளையாடிய என் சுந்தரனா? தேம்புகிறாள். அவளைத் தேற்றியபடி...] தும்பை: அக்ரமக்காரனம்மா அந்த முத்துமாணிக்கம்! வீசி எறிந்தான் ஓலையை! ஏசினான் கண்டபடியெல்லாம்! என் கரத்திலே கட்டாரி இருந்தால் குத்திக் கொன்றிருப் பேன், அந்தக் கொடியவனை! [அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே அங்கு வந்த மதிவாணன் மனம் பதறி மதி: தும்பை! என்ன.. என்ன... (கோபமாக) முத்து மாணிக்கமா, இப்படிச் சொன்னான்? அவனா மோசம் செய் கிறான்? நம்ப முடியவில்லையே. (கோபமாக வெளியே செல்கிறான். திலகா கண் ணீர் பொழியும் நிலையில் தும்பையைப் பார்க் கிறாள்.] காட்சி-- 92. இடம்: சோலை நாடு இருப்: குமாரதேவி. [குமாரியின் பொதுச் சபை கூடியிருக்கிறது. கவலை தோய்ந்த முகத்துடன் பிரமுகர்கள் உள்ளனர். அரண்மனை வெளியில் பெருந்திரள் கூடியிருக்கி றது, கொலு மண்டபத்தில். அதன் உட்புறக் கோடியிலிருந்து, செந்தாமரையுடன் அரசி வருகி றாள். அரசி, அரசி உடையும் தலையில் கிரீட மும் அணிந்திருக்கிறாள். அதைக் கண்டு அனை வரும் உருக்கின்றனர். நடுக்கமற்ற குரலில் படிக் கிறாள்.] குமாரி: பொதுச் சபையினரே! நம் நாட்டு சம்பிரதாய மும், அதைக் கட்டிக் காத்திட உறுதிகொண்டவர்களும்,
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/180
Appearance