சொர்க்கவாசல் 19 முத்து: அழகான பெயர்! திலகவதி! அப்பா ஒரு பைத்யம் விருந்தாம். வரவேற்பாம்! இனிமேலா? அவள் புன்னகை விடவா வேறு விருந்து வேண்டும்? (உள்ளே செல்கிறான். அப்போது ஒரு முதியவர் வேகமாக உள்ளே நுழைகிறார்.) முதி: சோமநாதா! சோமநாதா! {முத்து திரும்பிப் பார்த்து அங்கேயே நின்று விடு கிறான். தன்னை அழைக்கும் குரல் கேட்டு சோமநாதர் வருகிறார்.] சோம: பெரியவரே என்ன இது? வரவேற்பு வைபவம் முடிந்த பிறகு வந்தீரே! முதி: என்ன செய்யலாம்!அந்தக் குறும்புக்காரப் பெண் ணுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டேன். நேரமாகிவிட்டது. சோமநாதா! உன் மகனுக்கு திலகா வீட்டிலேதான் முதல் வரவேற்பாமே! [திலகா பெயரைக் கேட்டு முத்து அருகே வருகி றான். சோமநாதர் அறிமுகப்படுத்துகிறார்.] சோம: இவர்தான் முத்து, சந்தச் சரபம் சுந்தர மூர்த் திக் கவிராயர்-- பெரியவர்! என் மகன் முத்துமாணிக்கம். முதி: (கனிவுடன்) நல்ல பெயர்! அழகான தமிழ்ப் பெயர். வீரம் ததும்பும் முகம், அன்பு வழியும் விழிகள், அறி வாளி, முத்து! மதிவாணனும் திலகாவும், உன்னைப் பெரி தும் புகழ்கிறார்களப்பா. உட்காரலாமா? என் வாழ்த்துப் பாடலைக் கேள் சோமநாதா! (முதியவர் நடுங்கும் குரலைச் சரிப்படுத்தியபடி பாடுகிறார்.) [கவிராயர் வாழ்த்துப் பாடல்.)
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/19
Appearance