உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 195 திறந்திடவும், அன்பு நெறி தெரிந்திடவும் செய்த ஐயனின் அருளால்... நான் ஆபத்துக்களைத் துரும்பாக எண்ணும் துணிவையும், உயிரையும் இழக்க நேரிட்டாலும் உள்ளத்தி வேற்பட்ட உண்மையை உரைக்க அஞ்சலாகாது என்ற ஆற்ற லையும் பெற்றேன். அரசே! தங்கக் கூண்டிலே அடைபட்டுக் கிடக்கும் கிளியல்ல; வானத்திலே வட்டமிடும் வானம்பாடி மக்களின் கவி மண்டலங்களை ஆக்கவும் அழிக்கவும் வலிமை பெற்ற மக்களின் கவி, மணி முடிகளைத் தரவும் பறிக்கவும் உரிமை பெற்ற மக்களின் கவிமக்களின் கவி பேசுகிறேன். மன்னா! மக்களின் கோபத்தைக் கிளறாதீர் என்று எச்சரிக்கிறேன். வெற்: இழுத்துச் செல்லுங்கள் நாயை..உம். துரத் துங்கள், நாட்டை விட்டு வெளியே - நாத்திகன் மதிவாணன் ஒழிக. [அரசன் சபையைக் கோபமாக முறைக்க, சபையினர் மறுமுறை உரத்த குரலில் 'ஒழிக' என்று கூறு கின்றனர். மதிவாணன் இழுத்துச் செல்லப்படு கிறான்.) வெற்: மதிவாணன் குடும்பத்தாரைச் சிறையில் தள்ளு. [காவலனுக்கு உத்தரவிடுகிறான். சபை கலைகிறது] '. (வீதியில் மக்கள் செல்வக்கண்டு கற்பகத்தம்மை பதறிச்சென்று...] கற்: ஐயா! விசாரணை முடிந்ததா? என் மகனுக்கு. ஆபத்து ஒன்றுமில்லையே? திலகா: தீர்ப்பளித்தாகிவிட்டதா? ஒருவன்: என்னம்மா செய்யலாம்-- நாடு கடத்திவிட் டாங்க, உன் மகனை திலகா : நாடு கடத்தி விட்டார்களா? கற் ஏதோ அந்த மட்டோடு போச்சே, ஆண்டவனே! என் மகன் உயிருக்கு ஆபத்து இல்லை! நாடு கடத்தினா என்ன? வேழநாட்டிலே இருக்கக்கூடாது அவ்வளவுதானே!