200 சொர்க்கவாசல் யுடன் அமர்ந்தபடி உபதேசம் செய்கிறார். 'மெய் யன்பர்களே' என்று கனிவுடன் கூறிவிட்டு, அரசரும் பிரதானியரும் ரசிக்கின்றனரா என்ப தைக் கண்டறிய விரும்புபவர்போல அவர்களைப் பார்க்கிறார். பக்திமான்கள் என்பதைக் காட்டும் நோக்குடன் அனைவரும் அருமறையானந்தரைப் பாசம் நிறைந்த பார்வையுடன் நோக்குகின்றனர். மாசிலாமணி வெற்றிக் களிப்புடன் நிற்கிறார். மாசிலாமணி ஜாடை காட்ட மடாலயத்தார் சிலர் கை கொட்டுகின்றனர். அதே சமயம் தொலைவில், மரத்தடியில், மதிவாணன் பாடு கிறான். அருமறையானந்தர் செவியில் பலமான கரமோஷம் விழுகிறது. ஆனால் சபையோரின் கரகோஷமல்ல; வெளியே தொலைவிலிருந்து கேட்கிறது. சபையினர் முகத்தில் ஆச்சரியக் குறி கள். மன்னன் பணியாளைப் பார்க்க, பணியாள் ஜாடை புரிந்துவிட்டு வெளியே செல்கிறான். புன்னகையுடன் அருமறையானந்தர் பேசுகிறார்] அரு: மெய்யன்பர்களே! திரு அருளைப் பெறும் மார்க் கம் எது என்பதைத் திருமறைகள் தெளிவாகக் கூறிவிட்டன. (சபையிலே ஒரு சீமான் திருமறை என்ன என்று கேட்பவன் போலப் பக்கத்துச் சீமானைப் பார்க்க, அவர் தனக்குத் தெரியாது என அறிவிக்க உதட் டைப் பிதுக்குகிறார் - வேறு சீமான் இதைக் கவனித்து ரசிக்கிறார்.] - அருமறையானந்தர் தொடர்ந்து பேசுகிறார்.) அரு: மெய்யன்பர்களே! எவனொருவன் இந்திரியங் கள் எனும் துஷ்டக் குதிரைகளுக்கு, அறிவெனும் கடிவாள மிட்டு அடக்கி, நன்னெறி எனும் பாதையிலே செலுத்து கிறானோ, அவனே, இறைவனடி எனும் திருத்தலத்தை அடைவான்.
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/200
Appearance