208 சொர்க்கவாசல் [சிறுமியைப் போர்வீரன் துரத்த அவள் ஓடிவிடுகி றாள். கிழவி முனகிக்கொண்டே இருக்கிறாள்.] கிழவி: புத்தி கெட்டவன்-புத்தி கெட்டவன். போர்: உனக்கு கேட்குது பூஜை- மரியாதையா போசுமாட்டே? கிழவி போக முடியாது! என்னா செய்து விடுவே? நாலு பேரப் பிள்ளைங்க இருக்கிறாங்க எனக்கு! உள் னுடைய எலும்பை நொறுக்கிடுவாங்க! போர்: என்னட: தொல்லை இது! பாட்டியம்மா! ஊர் இருக்கிற இருப்பு தெரியாமே பேசாதே!போ வீட்டுக்கு. கிழவி: ஊர் இருக்கிற லட்சணம்தான் தெரியுதே -- பாடக்கூடாதாம் - பாடினா அடியாமில்லே--என் இஷ்டம்! நான் பாடுவேன்! உனக்கென்ன? பாட்டி தன் நடுங்கும் குரலில் பாடுகிறாள். அவளை சூழ்ந்துகொள்கிறது ஓர் கூட்டம். வேறு வழி யின்றி அவளையும் இழுத்துச் செல்கிறான் போர் வீரன்...] (சாலையில் போகிற ஒருவன் பாடுகிறான். போர் வீரர்கள் அவனைத் துரத்திச் செல்கிறார்கள். சோலையில், பெண்கள் பாடுகிறார்கள்- சிறை நிறைகிறது. சிறையில் உள்ள கைதிகளை அரசன் பார்வையிட வருகிறான். பிறைப்பட்டோரும் கைதிகளும் சேர்ந்து பாடுகிறார்கள். மன்னன் வெட்கப்பட்டுக் கொண்டே வெளியே செல்கி றான்...) [சிறைக்கூடத்தில்! ஒரு கைதி அண்ணே, இது என்ன! புதுப் புது ஆசாமி களர் கொண்டு வந்து தள்ளிகிட்டே இருக்கிறாங்க? பெரிய கொள்ளைக்கூட்டம் போலிருக்கு!
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/208
Appearance