உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 21 யாமல் பாடலைக் கேட்கிறான் மீண்டும் திலகா அதே அடி யைப் பாடக் கேட்டு அவள் மன நிலையை அறிந்து மகிழ்கிறான், குறும்புபல செய்பவள் அல்லவா? நாம் ஏன் இவளைக் கேலிசெய்ய லாகாது என்று எண்ணி, திலகா பாடி முடித்ததும் மதி: வீராதி வீரனானால் உனக்கென்ன, வேலையைப் பார் வேல் விழியாளே. (என்று பாடிட, திலகா திடுக்கிட, மதிவாணன் அவள் எதிரே வருகிறான், திலகா வெட்கமடை கிறாள் - திலகாவைக் குறும்பாகப் பார்த்தபடி.} மதி: திலகா! மனதிலே அப்படியே பதிந்து விட்டதோ பாடல்! திலகா : வெவ்வெவ்வே [கேலி காட்டிவிட்டு கோழிக் கூண்டை திறந்து தீனி போடுவதும், புறாக்களுக்குத் தீனி தூவுவது மாக இருக்கிறாள். மலர் பறித்தபடியே மதி வாணன் பேசுகிறான்.] மதி: உம் பாடு,திலகா! நான் கேலி செய்யமாட் டேன்; பாடு. இனிமையாகத்தான் இருந்தது. (முடியாது என்று செல்லப் பிடிவாதத்துடன் ஜாடை காட்டுகிறாள்; தலை அசைத்து திலகா. மதி: பாடு... பாடு... திலகா! என்று கேட்டுக் கொண்டபடி மதிவாணன் இருக் கவே, திலகா கோபங் கெரண்டவள் போல காலை பூமியிலே உதைத்துக் கொண்டு]