சொர்க்கவாசல் கள்? ஒரு மாது: என்னப்பா கூச்சல்? காவலாளி: அரசர் இங்குகூட வருகிறார். 211 ஒரு பெண்: அரசரைக் கூடவா சிறையில் போடுகிறார் காவ: அம்மா, புண்யவதிகளே! கொஞ்சநேரம், அவர் வந்து போகிறவரையிலே, வாயை மூடிக்கிட்டு இருங்களேன்! பெரிய தொல்லையாப் போச்சு உங்களாலே.. ஒரு பெண்: திறந்து விட்டுவிடு! உனக்கு ஏன் வீணான தொல்லை? நாங்க பேசாம வீட்டுக்குப் போயிடறோம்! காவ: சரிதான்- என் தலை? பெண்கள் சிரிக்கிறார்கள்] திலகா : பாவம், அந்த ஆளோட ஏன் வம்பு..? காவ: என் பிழைப்பில் மண் போடாதீங்க. மகாராசி களே! நான் புள்ளெ குட்டிக்காரன்! திலகா : அங்கே என்னப்பா அமளி... காவ: அமளியா? அமளி இருந்தாத்தான் வேலை சுலப மாயிடுமே! அடித்து நொறுக்கி விட்டிருப்பாங்களே! சிறை யிலே இருக்கிறவங்க எல்லாம், அரசர் வருகிறபோது அந்தப் பாட்டை கும்பலா கூடிக்கிட்டு பாடறாங்க... ஒரு பெண்: எந்தப் பாட்டை காவ: எல்லாம் இவங்க அண்ணன் பாட்டைத்தான்.. இன். பெண் : உனக்குத் தெரியாதா அந்தப் பாட்டு..? காவ: சரி - எனக்கே தீம்பு வைக்க ஆரம்பமா?- துணிஞ்ச பேர்வழிங்க- எனக்குப் பாட்டும் தெரியாது; கூத்தும் தெரியாது. . இ. பெண்: புளுகு தெரியும்--ஒரு நாள் பாடினதை நானே கேட்டிருக்கிறேனே!
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/211
Appearance