சொர்க்கவாசல் 229 [மதிவாணன் அசடு சொட்டப் பார்க்கிறான், அவள் கன்னத்தைத் தட்டியபடி...] குமாரி: ஆனால், இந்தக் காதல் விஷயத்திலே மட்டும் மாவீரனானாலும், மகா கவியானாலும், ஒரே அசடுகள் தான் ஆடவர்கள். மதி: கேலி போதும்! குமாரி! வா.. வா...! உன்னி உம் எவ்வளவோ பேச வேண்டும்! வாயேன்? காட்சி-117 இரும்: திலகா, முத்துமாணிக்கம். டம் : காடு. [திலகா ஓர் புறத்தில் - அவளுக்கு எதிர்ப்புற மாகத் தொலைவிலே முத்துமாணிக்கம் தள் ளாடிக் கொண்டு வருகிறான். அவனைக் கண்டு திலகா அலறுகிறாள். அவன் ஓடி வருகிறான். திலகா என்று தெரிந்ததும்.) முத்து திலகா! என் கண்ணே! காட்டிலா? இந்தக் கோலத்திலா? திலகா: யார்? என் மாணிக்கமா? என் இன்பமா? (என்று கூவிக் கொண்டே ஓடுகிறாள். கால் இட றிக் கீழே விழுகிறாள். அவளைத் தூக்கி மடி மீது சாய வைத்துக் கொண்டு ஆசையுடன் பார்க்கிறான். முத்து. அவன் முகத்தை அன்பு டன் தடவிக் கொடுக்கிறாள் திலகா. அவன் பயப் படுகிறான்...} திலகா: என் முத்துவா? என் மாணிக்கமா? கடைசியில் வெற்றி! காதல் பாதையில் வெற்றி பெற்றேன்! இதோ என் ஆருயிர்? [என்றுகூறிக்கொண்டிருக்கும்போது மயக்கம்மேலிடு கிறது. 'திலகா... திலகா.. என்று மனமுருகக் கூவுகிறான் முத்துமாணிக்கம்.]
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/229
Appearance