உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் .239 குமாரி இங்குமட்டுமல்ல, என் நாட்டிலும் மக்களாட்சி தான். ஓலை அனுப்பிவிட்டேன். மதி: மட்டற்ற மகிழ்ச்சி. மக்களாட்சியிலே உழைப்ப வரே உயர்ந்தோர், உலுத்தருக்கு இடமில்லை. உடைமை எனக்கே என்று கொக்கரிக்கும் கொலுப்பொம்மைகளுக்கு இடமில்லை. மக்களுக்கே நாடு சொந்தம். சக்திக்கேற்ற உழைப்பு; தேவைக்கேற்ற வசதி. அறிவு பரப்புவோம்; அற நெறியை மறவோம். (இரு போர் வீரர்கள் மடாதிபதியையும் மாசிலா மணியையும் இழுத்து வருகிறார்கள்.] மதி: மகானுபாவர்கள் வந்திருக்கிறார்கள். மக்கள்: அடித்து விரட்டுங்கள் இவர்களை. மதி: வேண்டாம். இவர்கள் தாராளமாக உலவ அனு மதியுங்கள்! இவர்கள், மக்கள் மதிபெற்றனர் என்பதை எடுத் துக் காட்டும் திருத்தூதர்களாக இருக்கட்டும். பாடுபட்டுப் பிழைக்கட்டும். பஞ்சை பராரிகளைப் பார்க்கட்டும். பசி, பட்டினி இன்னது என்று தெரியட்டும். இவர்களின் கபட வேடத்தை நம்பி மோசம் போகாதீர்கள். இனி ஒரு விதி செய்வோம்; அதை எந்த நாளும் காப்போம். அன்பே கடவுள்; அறநெறியே அபிஷேகம்; தூய உள்ளமே கோயில்; மக்கள் பணியே பூஜை. அதற்காக வாழ்வோம். [மடாதிபதியும் மாசியும் வெளியேறுகிறார்கள்] மக்கள்: மக்களாட்சி வாழ்க! [மதிவாணன் கொடியேற்றி வைக்கிறான்.]

  • சென்னை