சொர்க்கவாசல் 41 காட்சி-17 இடம்: மதிவாணன் வீடும் மலர்த்தோட் டமும். இருப்: திலகா, மதிவாணன், கற்பகம். நிலைமை: திலகா, கண்ணீருடன் சோக யாக வீட்டு வேலைகளைச் செய்த வண்ணமிருக்கிறாள். மதிவாணன் கவலையுடன் வேலைகளை அரைகுறையாகவே செய்கிறான். கற்பகத்தம்மாள் கலக்கத்துடன் காணப்படுகி றாள். தோட்டத்தில் தண்ணீர் சரியாக பாய்ச்சப்படவில்லை. செடி கொடிகள் நாளாகவாக உலருகின்றன.மலர்கள் பறிக்கப் படாமல் கருகி உதிருகின்றன; தோட்டம் அழகிழந்து இருக் கிறது. காட்சி--18 இடம்: மதிவாணன் வீட்டின் உட்புறம். இருப். கவிராயர், மதிவாணன் நிலைமை: மதிவாணன் சோகமாக இருக் கிறான். கவிராயர் வருகிறார். வணக்கம் செய்கிறான் மதிவா ணன். அவன் அருகே அமர்ந்து கொண்டு பேசுகிறார் கவிராயர். கவி: என்னடா மதிவாணார் இன்னமுமா கவலையும் கலக்கமும்? மலை குலைந்தாலும் மனம் குலையாதவன் தமி ழன். தமிழ் மறக்குடியில் பிறந்த நீ, இப்படிச் செயல் மறந்து இருப்பது தகுமா?
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/41
Appearance