உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சொர்க்கவாசல் (ஊரைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது பல் லக்கு, பரிவாரத்துடன். அருமறையானந்தர் ஆனந்தமாகக் கண்களை மூடிக் கொண்டு இன் பக் கனவு காண்கிறார், தமது எதிர்காலம் பற்றி. பரிவாரத்தின் கடைசி வரிசையில் பார வண்டி கள் செல்கின்றன. கொழுத்த எருதுகள் பூட்டப் பட்டு, அலங்காரம் செய்யப்பட்ட வண்டிகள். இரு பக்கமும் திருநீற்றுப்பட்டையும் வேலும் சின்னங்களாக பொறிக்கப்பட்டிருக்கின்றன. பரி வாரத்தின் முன் வரிசையிலே குதிரைகள் மீது செல்கின்றனர், சில மடத்து வீரர்கள். அவர்கள் ஏந்தியுள்ள கொடிகளிலும் திருநீற்றுப்பட்டை யும் வேலும் சின்னங்களாக பொறிக்கப்பட்டிருக் கின்றன.) காட்சி-22 - இடம்: சாலையோரம் - இன்னோர் புறம். இருப்: வண்டியோட்டி, மதிவாணன். நிலைமை: ம திவாணன் புறப்பட்ட இரட்டை மாட்டு வண்டி வந்து கொண்டிருக்கிறது. வண்டி யோட்டி உள்ளே நிம்மதியாக சாய்ந்து கொண்டிருக்கிறான்... வண்டியோட்டி: தம்பி/ வியாபார வேலையாகவாக வேழ நாடு புறப்பட்டே? மதி : இல்லை. நான்....(தயங்குகிறான்) வண்டி: போர்வீரனா? மதி: வாட்போர் வீரனல்ல. வண்டி: அப்படீன்னா? மதி: நான் ஒரு கலிவாணன்.