உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 55 காட்சி-27 இடம்: வெற்றிவேலன் மாளிகையில் ஓர் கூடம். இருப்: வெற்றிவேலன், அமைச்சர். நிலைமை: வெற்றிவேலன் வேட்டைக்குக் கிளம்புவதற்காக, தனி அறை யில் உடை அணிந்து கொண்டி ருக்கிறான். பணியாள் உடை களை எடுத்து அணிவித்துக் கொண்டிருக்கிறான். கூர்மை யான சொருகு ஈட்டியைத் தட விப் பார்த்தபடி இருக்கிறான் வெற்றிவேலன். வெற்றிவேல் னின் வேட்டையாடும் திற மையை விளக்கும் அறிகுறியாக மிருகங்களின் தலைகள் அங்கு காணப்படுகின்றன. மார்புப் பட்டையைக் கட்டும் போது பணியாளிடம்... வெற்றி: இழுத்துக் கட்டு. பணியாள் இழுத்துக் கட்ட...] போதாது. இன்னும் உம். அப்படி போதும்...சரி, சீக் கிரம்.. (உள்ளே அமைச்சர் நுழையக் கண்டு.) தவனக் காட்டு கரும்புலி இன்னும் சிக்கவில்லை. இன்று எப் படியாவது அதைக் கொன்றாக வேண்டும். வருகிறீரா அமைச் சரே?

அமை: இல்லை வேந்தே! இங்கு நான், நாட்டிலே உள்ள நரிகளை ஒழித்திடும் காரியத்தைக் கவனிக்க வேண் டும், அவசரமாக.