உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 61 ப. தலை : இனச அரசே! இவர்கள் சதிகாரர்கள். அர சன் ஆணைப்படி சிறைச்சாலைக்கு இழுத்துச் செல்கிறோம். கவி: (கேலியாக ) இசை அரசே! மகனே! ஆடம்பரம், அலங்காரம் அமோகமாகிவிட்டது. அறிவு ஒளி மங்கிவிட் டது கண்களில் மதி: (கலங்கி) பெரியவரே! தங்கள் குமாரியா? கவி: (பெருமையுடன்) ஆமாம். என் மகள், பூங்கோதை ஓலையை கொடுத்தேனே உனக்கு.-இந்தச் சதிகாரியிடம் தருவதற்குத்தான். எனை? மதி: இந்தக் கோலத்திலா நான் காணவேண்டும் உங் மகள்: இதிலே என்னப்பா ஆச்சரியம், நான் மாளிகை யைத் துறந்தேன். என் ஞானகுரு, அரண்மனையைத் துறந் தார் அறியாயா? மறந்தே போனேன். அறிந்ததை எல் லாம் மறந்து போன பெரியவனல்லவா நீ. மதி: (கலக்கமாகி) அம்மா! பெரியவரே! எப்படியும் நான் உங்களுக்கு விடுதலை பெற்றுத் தருவேன். மகள்: இன்னும் என்னப்பா குறை! காப்பாற்றி விடு வார், கலைவாணர்! நிச்சயமாக. நாம் குற்றமற்றவர்கள் என்பதாலே அல்ல; இவருடைய செல்வாக்கு உனக்கு விளங்க வேண்டும் அல்லவா, அதற்காக. கவி: மதிவாணா! குஷ்டம் பிடித்தவன் எடுத்துத் தரும் வெண்ணெயை விரும்புவாயா நீ ? மதி: பெரியவரே! கவி: உன் உதவியும் எனக்கு அப்படித்தான். அழைத் துச் செல்லுங்கள் ஐயா! மதி : என் மீது கோபம் ஏன் பெரியவரே! நான் செய்த குற்றம் என்ன?