சொர்க்கவாசல் 71 (முத்து ஒளிந்திருக்கும் இடம் தெரிந்து விடுகிறது, கற்பகத்தம்மாளுக்கு. உடனே, திலகாவுக்கு ஜாடை செய்து விட்டுச் சென்று விடுகிறார்கள். திலகா குறும்புப் பார்வையுடன் கற்பகத்தம்மாள் காட் டிய பக்கம் சென்று முத்து ஒளிந்திருக்கும் புதரிலே தண்ணீர் தெளிக்க, முத்து மீது தண்ணீர் விழ, அவன்... முத்து: திலகா?... திலகா!... (என்று கூறியபடி எழுந்து, அவள் கரத்தைப் பிடித்துக் கொள்கிறான். திலகா பாசம் மிகுந்த முறையில் முத்துவைப் பார்க்க...] முத்து: மாயக்காரக் கள்ளி! ஒரு பார்வையிலே என் னைப் பரவசப்படுத்தி விடுகிறாயே! [தில்காவை அருகே அழைத்து அணைத்துக் கொள்கிறான். திலகா அவன் பிடியைத் தள்ளி விட்டு...) திலகா : போதும் சரசம்! மனம் இரும்பு- பேச்சு கரும்பு உங்களுக்கு. விடுங்கள், வேலை இருக்கிறது எனக்கு. முத்து: கோபமா திலகா! செய்த குற்றம் என்னவோ? திலகா: குற்றமா? சேச்சே! இது ஒரு குற்றமாகுமா? காதலிப்பது, கனிமொழி பேசுவது, பிறகு கண்ணெடுத்தும் பார்க்காமல் தான் உண்டு தன் காரியம் உண்டு என்று இருந்து விடுவது-இது ஆடவரின் போக்கு. குற்றமாகுமா இது? விலகித் (கூறிக் கொண்டே முத்துவை விட்டு தொலைவாகப் போகிறாள் திலகா, அவளைத் தாவிப்பிடித்து, அவள் முகத்தை உற்று நோக் கியபடி.}
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/71
Appearance