சொர்க்கவாசல் 75 அருமறை: சொர்க்கவாசல்! பெயரைக் கேட்டதும் மக்கள் சொக்கி விடுவர்--உள்ளே ஒரு புறம் கைலாயம்; நமது புராண ஏடுகளில் உள்ள வர்ணனைப்படி. (படம் போட்டுக் காட்டுகிறார் தரையில்...] மாசி: ஆகா! அருமையாக இருக்கும். அரு: மற்றோர் புறம் வைகுந்தம். மாசி: அரியும், அரனும் வேறு வேறு அல்ல என்ற கோட்பாட்டை வினக்க. அரு: ஆமாம். (படம் போட்டபடி) பிரம்மலோகம். இந்திர லோகம் எல்லாம் புராண வர்ணனைப்படி அமைக்க வேண்டும். இங்கு கற்பக விருட்சம்; இது காமதேனு? பளிங் கால் உருவம். மாசி:மக்கள் பரவசமடைவர் குருநாதா! அரு: செலவு ஏராளமாக ஆகும். காணிக்கை கிடைக் குமா? மாசி: சந்தேகமா? காணிக்கைச் சீட்டுக்கள் இலட்சக் கணக்கிலே தயாரித்து, நமது உபதேசியார்கள் மூலம் நாடெங்கும் பரப்பினால் காணிக்கை குவியும். அரு: நல்ல யோசனை --- காணிக்கை சீட்டு உம் பெயர் அவ்விதம் இருப்பதைவிட அருள் சீட்டு என்று இருந் தால் நல்லது. மாசி: அருள் சீட்டு! அருமையான பெயர். வேந்தனி டம் நானே முதல் சீட்டு தருகிறேன். அரு: நடுநாட்டரசருக்கு நான் இதுபற்றி அனுப்புகிறேன். மாசி: இருமுகம் கண்டதும் நடுநாட்டரசர் தாராள மாசு காணிக்கை தருவார்.
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/75
Appearance