சொர்க்கவாசல் 77 நிலைமை: பாசறைக் கூடத்தில், விதவித மான ஆயுதங்கள், கவசங்கள் உள்ளன. சுவற்றிலே போர்க் கலக் காட்சிகளின் ஓவியங்கள் தொங்கவிடப் பட்டுள்ளன. வெற்றிவேலன் ஒரு உயரிய பீடத்தில் அமர்ந்திருக்கிறான். எதிரே இரு பணியாட்கள் ஒரு கோட்டை அமைப்புப் படத் தைத் தூக்கி நிறுத்திக் காட்டிக் கொண்டிருக்கின்றனர், வெற்றி வேலனுக்கு. கோட்டைக் டட அமைப்பாளன், விளக்கம் கூறிக் கொண்டிருக்கிறான். வெற்றிவேலன் கோட்டைப் படத்தைக் கூர்ந்து கவனிக் கிறான்.. கட் வெற்றி: (ஒரு இடத்தைக் காட்டி) இது சுரங்கப் பாதையா? சிற்பி: ஆமாம் வேந்தே! இதிலே நுழைந்தால், இதோ. எதிர்ப்புறம் தெரிகிறதே குன்று—அங்கு போகலாம். வெற்றி: (வேடிக்கையாக) கோட்டை கட்டும் போதே ஓடுவதற்குத்தானா வழி அமைக்க வேண்டும்? சரி.. இந்த டம்? சிற்பி: முற்றுகையை முறியடிக்க உணவுப் பொருள் வேண்டுமல்லவா? இதுதான் கிடங்கு - ஏராளமான உண வுப் பொருளைச் சேமித்து வைக்கலாம். (வேறோர் குறி யைக் காட்டி) இது நீர் ஊற்று--இங்கே: மாசிலாமணி வருகிறான். கோட்டை ஓவியத் தைப் பார்த்தபடி...)
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/77
Appearance