உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 79 டாளே, இதோ பார்! இவ்விதம்தான் கைவாயம் இருக் கும். வைகுந்தத்தின் வசீகரத்தைப் பார் என்று ஏடுகளைக் காட்டுவதைவிட இப்படி ஒரு இடமே அமைத்துக் காட்டி னால், மந்த மதியினரும் புரிந்து கொள்வார்களல்லவா? வெற்றி: உண்மைதான்! மாசி: உள்ளத்திலே உயர்ந்த எண்ணம் மலரும். சிற்பி: புதிதாக இதுபோலக் கட்டத் திட்டமா? மாசி: திரு அருளின் துணை கொண்டு, அருமறை யானந்தர் இந்தப் புனிதக் காரியத்தைத் துவக்கி விட்டார். செலவு பற்றிய கவலை, சிரமத்தைப் பற்றிய சஞ்சலம்,பஞ்சு பஞ்சாகப் பறந்து விட்டது, குருநாதருக்கு, நான் உறுதி கூறினதும். வெற்றி: என்ன உறுதி கூறினீர்? மாசி: சொர்க்கவாசல் கைங்கர்யத்துக்குத் தங்களின் பேருதவி தாராளமாகக் கிடைக்கும் என்று உறுதி கூறினேன். சிற்பி: பெருஞ் செலவு! கோட்டை கட்டவே செலவு ஏராளமாகப் பிடிக்கும். பிறகு வருகிறேன் மன்னா! [வணக்கம் கூறிவிட்டுச் செல்கிறான் வெறுப்புடன் பணியாட்கள் மாசிலாமணியின் படத்தை எடுத். துத் தூக்கி வைத்துக் காட்டுகிறார்கள்.] வெற்றி: அருமையான ஏற்பாடு! என்னால் ஆக வேண்: டியது என்ன? கட்டளையிட்டால் செய்கிறேன். 'சொர்க்க வாசல் கைங்கரியத்துக்கு நமது மண்டலத்துப் பிரபுக்களும். தாராளமாகக் காணிக்கை தருவர். மாசி: பக்தி பட்டுப் போகிற இந்தச் சமயத்திலே சத்காரியத்துக்குப் பணம் தருவார்களா என்ற சந்தேகம் குருநாதருக்கு. வெற்றி: நானே பிரபுக்களுக்குச் சொர்க்கவாசல் மகிமையைப் பற்றி. சொல்கிறேன்.