உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 87 வெற்றி: பலரும் கூறக் கேட்டிருக்கிறேன். குமாரதேவி யைப் பற்றி புகழ்ந்து பேசுவர், அரசியின் அறிவாற்றலை -அழகை. . அமை: நாடு வளமானது வேந்தே! வேழநாட்டை விடப் பெரிது அளவில்--திருமணமாகி விட்டால், வேந்தே! வேழநாடு பேரரசு ஆகிவிடும். அரசுகள் பல அச்சத்தா லேயே வேழநாட்டின் கொடியின்கீழ் வந்துவிடும். வெற்றி: வளமான நாடுதான். ஆனால் அரசி அகம் பாவக்காரியாம். அரசர்கள் பலரை அவமதித்தவளாம். அமை: வதந்தி! வீணான வதந்தி, வேந்தே! எட்டாப் பழம் - எட்டிப்பழம் என்பார்களே, அதுபோல வெற்றி: நமக்கு மட்டும் குமாரதேவியின் சம்மதம் கிடைக்கும் என்று எப்படி நம்புவது? அமை: ஏற்பாடு செய்ய முடியும் வேந்தே! சுலை விழாவே அதற்குத் துவக்கம். வெற்றி: முதலில் குமாரியின் உண்மையான குணம் தெரியவேண்டும் எனக்கு. அமை: மதிவாணன் அதை அறிந்து கூறுவான். அவனி டம் நான் என் திட்டத்தை விளக்கமாகக் கூறி அனுப்பி வைக் கிறேன். (மன்னன் சம்மதம் தெரிவிக்கிறான். அமைச்சர் களிப்புடன் வெளியே செல்கிறார்...} காட்சி- 42 இடம்: முத்துமாணிக்கம் விடுதி இருப்: வேலையாள், முத்துமாணிக்கம். நிலைமை: முத்துமாணிக்கம் களிப்புடன் உடை அணிந்து கொண்டிருக் கிறான். வேலையாள் ஒருவன் அவசர அவசரமாக ஓடி வரு கிறான்.