உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 89 அமை: தூதுவர்கள்! அவர்களுக்கு மனதை உருக வைக் கத் தெரியாதே! இசையுள்ளம் வேண்டுமே. இந்தக் காரியத் துக்கு. படையின் அளவு தெரியும் அவர்களுக்கு; மனதை பக்குவப்படுத்தும் முறை தெரியாதே! வீணாக ஏன் தயக்கம்? மதிவாணா! நான் சொல்கிறபடி நடந்து கொள். வெற்றி கிடைத்தே தீரும். [மதி விடை பெற்றுக் கொள்ளுகிறான்.] காட்சி--44 இடம்: வள்ளியூரில் சோமநாதன் மாளிகை உட்புறம். இருப்: முத்துமா சிக்கம், வேலையாள். நிலைமை: சோமநாதர் உடலெல்லாம் கட்டுகள். மரணப்படுக்கையில் . இருக்கிறார். முத்துமாணிக்கம் அந்த நிலை கண்டு பதறிக் கதறுகிறான். முத்து: ஐயோ! அப்பா...அப்பா! (உடனிருந்த வேலையாட்கள் விம்முகிறார்கள். பேச முடியாத நிலையில் சோமநாதன் முத்து மாணிக்கத்தை அழவேண்டாம் என்று ஜாடை காட்டுகிறார்.] முத்து: (அழுகுரலில்) என்னப்பா நேரிட்டது? வேலை: புவி அடித்து விட்டது. முத்து: புலி இவரை அடிக்கும்போது, வில்வக்காட் டான் என்ன செய்து கொண்டிருந்தான்? கூவ வேண்டாம்' என்று சோமநாதன் ஜாடை காட்டுகிறார். சோமநாதன் முகத்திலே பயம் படிந்திருக்கிறது. வேலையாட்களை வெளியே போகச் சொல்லிவிட்டு..]