பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139

வதற்குள், மறுபடி மணி ஒலித்தது. தமிழ்ச்சித்தனின் வீட்டிலிருந்து போலீஸ் அதிகாரி தனபால் பேசினர் :

  • மஹறி ! இரவு பூராவும் கான் ரொம்பவும் கஷ்டப் பட்டுப் போய் விட்டேன். துளசிங்கத்திற்கு ப்ளட் ப்ரஷர் வியாதியாம். பாவம், அவதிப்படுகிறார். டாக்டர்கள் நான்கைந்து பேர் வந்தார்கள். ஒன்றும் சரிப்படவில்லை. ஆண்டவனின் திருச்சபையில் மண்டி யிட்டு ஒரு விடிை பிரார்த்தனை செய்யக்கூட ஒப்ப மாட்டேன் என்கிருன் தமிழ்ச்சித்தன். ஒன்றே தெய்வம், ஒருவனே தேவன் என்கிற புதிய கல்ல பாடத்தைக்கூட கம்ப மறுக்கிருனே இவன் தமிழ்ச் சித்தன் எங்கோ புறப்பட்டுப் போயிருக்கிருன் ... அவரவர்கள் அதிருஷ்டம் அப்படி !...எனக்கென்னவோ, தெய்வம் மனசு வைத்தால் மட்டுமே இம்மாதிரியான வியாதிகள் சொஸ்தமாக முடியும் என்பதாக நம்புகிற வன் கான். என்னுடைய இந்த ஐம்பது வருஷ அனு பவத்திலே, கடவுளை கேரில் தரிசிக்கவில்லையென்றால் கூட, தெய்வத்தின் அனுக்கிரகத்தை எவ்வளவோ தடவை கிதர்சனமாகக் கண்டிருக்கிறேன். மஹறி, எனக்கு ஒன்று தோன்றுகிறது. முதலில் துளசிங்கத் தின் உயிரைக் காப்பாற்றியாக வேனும், ஆகவே கீ உடனடியாகப் புறப்பட்டு வந்தால் நல்லது. நீ வந்து தமிழ்ச்சித்தனின் மனசை கல்லபடியாக மாற்ற முனைக் தால், வெற்றி கிடைத்தாலும் கிடைக்க முடியும் 1:

பரிவு, பதட்டம், கடமை ஆகிய மூன்று புள்ளி களில் எழுதப்பட்ட முக்கோணத்திற்குள் கின்று கொண்டு அவர் பேசினர். - -

நாடக மேடையில் கண்ட துளசிங்கத்தின் பக்தி புடன் கூடிய உருவத்தை அவள் பலமுறை நினைத்துப்