உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 கூனி: கைகேயி: கூனி: கைகேயி: கூனி: கைகேயி: கூனி: கைகேயி: களுக்குப் பிழைப்பு. நம்மை எதிர்காலம் ஏதாவது கூறும். நம்மைத் துற்றுவார்கள். மன்னனைப் பாராட்டுவார்கள். அப்படி நம்மைத் துற்றினால்தான் காவியம் வாழும். உலகத்தோடு ஒத்துப் போகவில்லை என்றால் அவர்கள் கவிதை உடனே சரிந்து விழுந்து விடும். காவியத்தில் நாம் இருவரும் பண் பிழந்த கொடிய வர்கள், கயமை நிறைந்த படைப்பாகப் படைத்துக் காட்டு வார்கள். கவிஞர்கள் தீட்டி எழுதுவதற்கு நாம் சரியான படைப்பு, இந்த நாட்டில் பெண்மையைப் பழிப்பதற்கு உன்னைத்தான் பயன்படுத்தப் போகிறார்கள். பொதுவாகக் கவிஞர்கள் ஆண்களாக இருப்பதால்தான். பெண்களும் ஆண்மனமே பெற்றிருக்கி றார்கள். அவர்கள் மட்டும் பெண்ணுள்ளத்தை எங்கே கண்டு பேசப் போகிறார்கள். அவர்கள் அப்படியே என்னை மாற்றிக் காட்டி விடுவார்கள். நீயே பார். நம் வாழ் நாளுக்குள் ஒரு மகா காவியமே எழுதி விடுவார்கள். அவர்கள் தீட்டும் சித்திரமே வேறு விதமாக இருக்கும்.