உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 மகனை அனுப்பிப் புகழ் பெறுதலே மன்னனுக் குத் தவமாகும். அன்னவன் சொல்லேற்றுக் கானம் செல்லலே எனக்குத் தவமாகும். கானகம் சென்ற செய்தியை உன்னால் உரைக்க முடியவில்லை என்றால் முனிவனைக் கொண்டு இதனை உணர்த்து பரதனுக்கு நீ அருகிருந்து அறிவு சொல்லி அவனுக்குச் சிறந்த அமைச்சனாக நீ விளங்கு இது உன் கடன். பரதனால் என் தந்தை என்னைக் காட்டுக்கு அனுப்பினான் என்று வஞ்சம் பாராட்டாதே. என்னிடம் காட்டும் அதே அன்பை அவனிடமும் காட்டவேண்டும். அது மட்டுமல்ல அமைதியாக மன்னனுக்கு எடுத் துச்சொல்லி, என்மீது காட்டும் அன்பைத் தம்பி பரதனிடமும் அவர் காட்டவேண்டும் என்று நான் வேண்டியதாகச் சொல். ஏழிரண்டு ஆண்டு நீத்து மீண்டும் வந்து அவர் திருவடி தாழ்வேன் என்று கூறி அவரது தளர்ச்சியைப் போக்கு நீ இதை வசிட்டன் வாயால் மெல்லச் சொல்லச் செய். என் னைப் பயந்து எடுத்த மூவர்க்கும் குறைவிலா என் நெடுவணக்கம் கூறி அவ்விறைமகன் தசரதனின் துயர் துடைத்து அவர் அருகில் இரு சீதை: அரசர்க்கு அத்தையர்க்கு என்னுரையையும் வணக்கத்தையும் முன் இயம்பு என் பொன்னிறப் பூவைக்கும் கிளிக்கும் நன்மொழிபயிற்றிப் போற் றுக என்று என் தங்கையரிடம் இயம்பு. சுமந்திரன்: பூவைக்கும் கிளிக்கும் நன்மொழி பயிற்றி வந்த நங்கையே! உன் மென்மொழி கேட்கும் வாய்ப்பை இந்த நாடே இழந்து விட்டது. நீ இந்த இனிய சூழலை விட்டுக் காட்டு க்குப் போவதை