உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 கூனி: கைகேயி: மாட்டார் என்று புகழப்படப் போகிறான். இப்பொழுதே கோசலை அவனை வாழ்த்திவிட் டாள். மன்னர் மன்னன் நீ என்று அவனை வாழ்த்திவிட்டாள். வசிட்டரும், நீ பட்டம் ஏற்றுத்தான் தீர வேண்டும். என்று சட்டத்தை எடுத்துக்காட்டி இருக்கிறார். நாடு மட்டும் அல்ல காடு கூட அவன் புகழைப் பேசப் போகிறது. குகன் எவ்வளவு வேகமாக எதிர்த்தானோ அவ்வளவு வேகமாக அடங்கிவிட்டானாம். வற்கலையின் உடையானை மாசடைந்த மெய் யானை நற்கலையின் மதியென்ன நகையிழந்த முகத்தானைக் கற்கனியக் கணிகின்ற துயரானைக் கண்ணுற்றான்; விற்கையின்று இடைவீழ விம் முற்று நின்றொழிந்தான் என்று அவர்கள் சந் திப்பைப் பற்றி செய்தி கிடைத்தது. மேலும் எம் பிரான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு. என்று பேசிக் கொண்டானாம். வேடுவன் குகன், நாவாய்த்தலைவன் அவனே நா வாய் குளிர வாழ்த்துகின்றான் என்றால், பரதனின் புகழை இனி இந்த நானிலம் பேசாமல் இருக்குமா. அதைத்தான் நான் எதிர்பார்த்து நின்றேன். எங்கே இவன் உடனே ஆட்சியைப் பற்றி என்னைப் போன்று உலகின் நிந்தனைக்கு ஆளாகிச் சிந் தனை இழக்கின்றானோ என்று பார்த்தேன். புத்திசாலி, உணர்ச்சி மிக்கவன். உயர்ந்த எண் னங்கள் கொண்டவன். உடன் பிறந்தவரைப் பகைக்காத செம்மல், பரதன் ஆளவேன்டும் இந்த நாடு பரத கண்டம் என்ற புகழ் நிலைநாட்ட வேண்டும். கேகயன் மகளால்தான் இந்த நாடு பரத கண்டம் என்ற பெயர் அழியாமல் பாது காத்ததாக இருக்க வேண்டும். வரலாற்றில்