உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 கைகேயி: கூனி: கைகேயி: கூனி: கைகேயி: கூனி: கைகேயி: என் மகனைப் புகழ்ந்து கொண்டே இருக்கும். அது போதும். உலகம் என்ன சொல்லும். கேகயன் மகள் என்று முன்னம் சொன்னது. இப்பொழுதும் அதைத்தான் சொல்லும். கேகயன் மகள் உறுதி கொண்ட நெஞ்சினள் என்று சொல்லும், உன் மகன். தசரதன் மகன் என்பதை நிறுவி விட்டான், வரத்தால் பெற்ற அரசைத் தன் திறத்தால் நிறுவி விட்டான். முறைப்படி இராமனுக்குப் பின் தான் ஆட்சி அவனுக்கு வரவேண்டும். அதுதான் இந்த நாட்டுச் சட்டம். மன்னவன் சொன் னாலும் மரபு அதற்கு இடம் கொடுக்காது. என் மகனும் மரபையும் தன் பக்கம் இழுத்துக் கொண் டான். இராமனிடம் கொடுத்துவிட்டு மீண்டும் முறைப்படி அவனிடமிருந்து பெற்றுக் கொண்டான். அப்பொழுது உன் மகன். என்னைவிடப் புத்திசாலி. சட்ட நுணுக்கம் அறிந்தவன். அதனையும் அவன் தன் பக்கம் இழுத்துக் கொண்டான். கேகயன் மகள் பெறாத வெற்றியை அவன் பெற்று விட்டான். இனி நான் தசரதனின் மனைவி, விதவைக்கோலம் நான் விரும்பி ஏற்ற கோலம். அந்தக் கோலத்தில் தசர தனின் நினைவோடு என் வாழ்நாள் முழுவதும் கழிப்பேன். கேகயன் மகள் அல்லள் இவள். இவள் தசரதனின் மனைவி தசரதனின் மகன்தான் இப்பொழுது ஆட்சி செய்கிறான், அவன் மகன் தான் இனியும் ஆட்சி செய்யப் போகிறான். 米米米冰冰冰米米