உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 காட்சி:13 (இராவணன் பேரவை. அவன் முன்னும் பின்னும் சீற்றத் தோடு நடக்கின்றான்) இராவணன்: எங்கே அந்த வானரப்பயலைப் பிடித்து இழுத்து வந்தீர்களா? அரக்கன்: அதோ கட்டிப்பிடித்து வருகிறார்கள்; இந்திர இராவ: சித்து தன் பாசத்தால்தான் அவனைக் கட்ட முடி ந்தது. என்ன அக்கிரமம்? பொழிலை எல்லாம் அழித் தான். கிங்கரரை வதைத்தான். சம்புமாலியைச் சிதை த்தான். பஞ்ச சேனாதிபதிகளைப் பகைத்தான். என் மகன் அக்கமரனை அழித்தான். இந்திரசித்து போய் இருக்கின்றான். அவன் சித்து இவனிடம் ஒன்றும் பலிக்காது. (அனுமனைக் கயிற்றால் கட்டிப்பிடித்து வருகிறார்கள்) இராவ: egal gol: இராவ: அனு: நன்று, நன்று. வந்தாயா! இனித் தப்பித்துக் கொள்ள முடியாது. என்று உன் னைக் காண்பது என்று காத்து நின்றேன். நீயும் என் பார்வையினின்று தப்ப முடியாது. நீதானா இராவணன்? பத்துத் தலை இருக்கும் என்று சொன்னார்களே! பத்து தலை இல்லை எனக்குப் பற்றுதலை உண்டு. நீ இப்பொழுது அஞ்சுதலைப் பெற்றாய். இங்கு உனக்கு ஆறுதலை இல்லை. வெறும் தறுதலையாகப் பேசுகின்றீரே, நான் கேட் டதற்கு மறுதலை அளிக்காமல். என்னைக் கட்டி விட்டதாகக் கருதுகின்றீர். கட்டுண்டேன்; காலம் வரும். உன்னைப் பார்த்துப் பேசவேண்டும் என்று