உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை 'சொல்லின் செல்வன்' என்ற நாடக நூலைப் படித்து மகிழ்ந்தேன். முதல் நாடகத்தில் கம்பரின் அனுமன் முதலிய மாந்தர்களும், மூன்றாம் நாடகத்தில் கைகேயி முதலான கம்பரின் காவிய மாந்தர்களும் அமைந்திருக்கிறார்கள். இரண்டாம் நாடகத்தில் அவ்வை, அதிகமான், கபிலர் முதலான சங்க இலக்கிய மாந்தர் களைக் காண்கிறோம். சொல்லின் செல்வன், வாய்ச் சொற் கள், கேகயன் மகள்' என்ற நாடகப் பெயர்கள் ஏற்புடையன. நாடகங்களில் உரையாடல் காவியங்களின் கருத்துகளையும் தொடர்களையும் புறநானூற்று மொழி களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. கேகயன் மகள்' என்ற நாடகத் தில் கைகேயி யைப் புதிய நோக்கில் காண்கிறோம். ஆயினும் அங்கும் கம்பரின் கற்பனையையும் தனிச்சிறப்புடைய தொடர்களையும் காண்கிறோம். இவற்றில் சில கல்லூரி மாணவர்கள் நடித்துக் காட்டியவை. படித்து மகிழ்வதற்கும் ஏற்றனவாக அமைந்திருப்பது போற்றத் தக்கது. நடை எளிமையும் தெளிவும் சுவையூட்டும் திறனும் பெற்று விளங்குதல் மகிழத்தக்கது. இவற்றைப் படைத்து நல்கிய தமிழ்ப் பேராசிரியர் திரு. ரா. சீனிவாசன், சொல்லின் செல்வன் என்ற இந் நூலின் வாயிலாக நல்லதொரு தொண்டு ஆற்றியுள்ளார். தமிழகம் இந்த நன்முயற்சியை வர வேற்பதாக மு. வரதராசன்