உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபி: அவ்: அவ்வை: அதி: அவ்: அதி: அவ்: அதி: அவ்: 5 65 அது புகழ், அந்தப் புகழ் அவலத்தின் அடிப் படையில்தான் அமையும். உங்கள் விளக்கம் என்னை எண்ண வைக்கிறதே தவிர துன்பத்தை ஆற்றவைக்கவில்லை; வருகிறேன். பாரி மகளிர் எனக்காகக் காத்து நிற்பார்கள் அவர்கள் அவலம் துடைத்தால், அதை முதலில் கவனியுங்கள், பிறகு சந்திக்கலாம். காட்சி : 3 அதிகனும் அவ்வையும் (கவிதை எழுதுகின்றார் நிறுத்தி நிதானமாக) 'களம்புகல் ஒம்புமின் தெவ்விர் போர் எதிர்ந்து எம்முளும் உளன் ஒருபொருநன்; வைகல் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால்அன் னோனே.” என்ன புதிய கவிதை எதைப்பற்றி ? உன் வீரத்தைப் பற்றி, களம் புக்ப் பகைவரின் உளம் அஞ்சவேண்டும் என்பதற்குத்தான் இக் கவிதை எழுதுகின்றேன். உன் வலிமையைப் பாராட்டி எழுதுகின்றேன். ஏட்டில் எழுதும் கவிதை அவர்கள் உள்ளத்தில் பதியும். பதிந்தால் போரை விலக்குவர் ; அஞ்சி அகல்வர். இதுவும் உங்கள் சொல்லாற்றலே என் போர்த் தினவை உங்கள் பாவால் மற்றவர்க்கு உணர்த்து கின்றீர். அதனால் போர் என்னும் வாய்ப்பே எனக்குக் குறைந்து விடுகிறதே! போர்த்தினவு. அதைப்பற்றியும் ஒரு கவிதை எழு