உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 - 6 அவர்களே நாம், நாமே அவர்கள் - என்கிற அள வுக்கு அந்த பரந்த உள்ளத்தோடு பொதுமக்கள் அத்தனை பேர்களும், கூடுமானவரை "கைத்தறி துணிகளையே அணிவோம்" என்பதைத்தான் இந்த கைத்தறி வாரத்திலே உறுதியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ளுகிறேன். இந்தத் தொகுதியிலே இருக்கிற கைத்தறி நெச வாளர்களுடைய குறைகளைப் போக்குவதற்கு கூடு மான வரையில் நம்முடைய தாசில்தார் அவர்களும், இன்னும் இந்த வட்டாரத்திலே இருக்கிற அதிகாரி களும், அந்த முயற்சியிலே ஈடுபடவேண்டும். தண் ணீர்ப்பள்ளி, ராசேந்திரம் போன்ற இடங்களிலே யுள்ள நெசவாளர்கள் தாங்கள் இருப்பதற்கு வீடில்லை சில இடங்களிலே வீடுகட்டிக் கொள்ளுவதற்கு அனு மதி வேண்டும் - என்று கேட்கிறார்கள். அதற்கான முயற்சியிலே நம்முடைய தாசில்தார் போன்றவர்கள் ளெல்லாம் உறுதுணையாக இருந்து அவர்களுக்கு, உதவ வேண்டுமென்று கேட்டுக்கொண்டு "கைத்தறி நெசவு ஓங்குக ! கைத்தறியாளர் வாழ்க!" என்றுகூறி சவுஓங்குக! என்னுடைய உரையை முடித்துக்கொள்ளுகிறேன். - குளித்தலை 11-5-57 கைத்தறி வாரவிழா) ம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/112&oldid=1703661" இலிருந்து மீள்விக்கப்பட்டது