உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 என்று பாருங்கள். சங்க இலக்கியத்திலிருந்து கிடைக்கின்ற அந்த அம்பு, ஒரு வீரனுடைய அம்பு றாத்தூணியிலிருந்து புறப்பட்டு ஒரு புலியினுடைய வயிற்றைக் கிழித்து - அதாவது ஒரு விலாப்புறத் திலே நுழைந்து, இன்னொரு விலாப்புறத்தின் வழியே வெளிப்பட்டு - பக்கத்திலே இருக்கிற வாழைமரத் திலே தொத்திக்கொள்ளுகிறது. இது சங்க இலக் கியத்து அம்பு ! நீங்கள் கேட்கலாம், புலியினுடைய ஒரு விலாவினைக் கிழித்து, இன்னொரு விலாவின் வழியாக வெளிப்பட்ட அம்பு எப்படியப்பா வாழை மரத்திலே தொத்திக் கொள்ளும்?" என்று. அங்கே தான் கவிதை நயமும்; கலை அழகும் ஒன்றை யொன்று பின்னிக்' கொண்டு கிடக்கின்றன, புலியி னுடைய விலாவிலே நுழைந்துவிட்ட காரணத்தால், அம்பினுடைய வேகம் குறைந்து வாழை மரத்திலே தொத்திக் கொள்ளுகிறது. அம்பினுடைய வேகம் எப்படிக் குறைந்தது என்பதை — அதை வாழை மரத்திலே தொத்த வைத்து அந்தக் கவிஞன் அழ காகக் காட்டியிருக்கிறான். கலையைச் சமைத்திருக் கிறான். ய - - அதே நேரத்தில் இராமாயணத்திலும் ஒரு அம்பு புறப்படுகிறது. இராமனுடைய அம்புறாத் தூணியி லிருந்து புறப்பட்ட அம்பு, எதிரே இருக்கிற இராவண னுடைய சேனைகளையெல்லாம் அழித்துவிட்டு, பிறகு அங்கிருந்து புறப்பட்டு, இராவணனுடைய பத்து தலைகளையும் அறுத்து எறிந்துவிட்டு, இராவணன் சீதையைப்பற்றி நினைத்திருக்கிறானா-என்பதற்காக அவனுடைய இரத்தத்திலே நீந்தி—எலும்புகளில்- நரம்புகளில் எல்லாம் நுழைந்து சென்று, சீதையி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/124&oldid=1703673" இலிருந்து மீள்விக்கப்பட்டது