உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 எப்படி விளைந்தது என்று கருதினேன் - சிந்தித் தேன்- புதுமை அழைத்ததில் இல்லையப்பா! - 66 - இயக்கத்திலேயே ஏற்பட்டு விட்டது இந்தப் புதுமை!' என்று அழுத்தமான பதில் கிடைத்தது. - மாநாடு - மாலை - மரியாதை - தலைவர் இவை களுக்காக ஏங்கிக் கிடந்து - கவலைப்பட்டு - கண்ணீர் விட்டு இப்போது பதவியும் பாராட்டும் கிடைத்து விட்டது என்று எக்காளம் முழங்கிடும் சுயநலப்பதவி வேட்டைக்கும்பலல்ல நான் சார்ந்திருக்கும் இயக்கம். என் போன்றவர்களுக்கு இந்தச் சிறப்பு வழங்கப் படுவதின் நோக்கம் இயக்கம் இளைஞர்களின் சொத்து - உழைப்பாளிகள் அமைத்த மாளிகை - அதில் உல்லாச புரியினர் வாழ முடியாது என்பதை நாட்டுக்கும் - நாட்டிலே நம்மைப்பற்றி நச்சுக் கருத் - துக்களை நடமாட விடுபவர்களுக்கும், எடுத்துக் காட்டத்தான் என்பது என் எண்ணம். த - ஒரு தலைமை வகிப்பது என்பது கட்சியிலே நட்சத்திரத்தை உண்டாக்குவது என்பதல்ல. அப்படி லை மை வகிப்பவர்கள் கருதினாலும் - அல்லது தலைமை வகிப்பவரைப்பற்றிக் கருதினாலும்-கட்சிக் கும் கட்சித் தொண்டுக்கும் அற்ப ஆயுள்தான் என்று முடிவு கட்டிக்கொள்ள வேண்டும். வரப்போகும் போராட்டங்களிலே இதுவரை முன்னேற்றக் கழகத் தின் சார்பாக நடைபெற்ற மாவட்ட மாநாடுகளின் தலைவர்கள் வரிசைக் கிரமமாகக் களத்திலே நிறுத்தப் படவேண்டும். அந்தந்த மாவட்ட மாநாட்டுத் தலைவர் களின் சார்பாக நான் தலைமைக் கழகத்தைக் கேட் டுக் கொள்வதெல்லாம், "எங்களை எதிர்காலப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/146&oldid=1703695" இலிருந்து மீள்விக்கப்பட்டது