உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 நீக்க பாராள வந்தவர் எடுத்துக்கொண்ட முயற்சி எட்டு அவுன்சு அரிசியை ஆறு அவுன்சு அரிசியாக் கியதுதான். இந்தப் பசி போக்கும் கைங்கர்யத்தைச் செவ்வனே செய்ய யாரும் முன்வரவில்லை. நாமோ நாட்டு மக்களின் ஒரு பகுதி. ஆனாலும் வாயில்லாப் பூச்சிகளல்ல. நமது வார்த்தைகள் முதலில் அலட் சியப் படுத்தப்பட்டாலும் பிறகு அதுதான் "வேத வாக்'காக மாறியிருக்கிறது பலருக்கு. பசியால் மக்கள் மாளும் நேரத்தில் பாராமுகமா யிருக்கும் சர்க்காருக்கு - ஒருமுறை நினைவுபடுத் தும் நிகழ்ச்சியை நாம் நடத்திக் காட்ட வேண்டும்! சென்னையிலே, பட்டினிப் பட்டாள ஊர்வலம் நடந்த பிறகு நல்லதொரு எதிரொலி ஏற்பட்டது. அது போல, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே, நாடெங்கும் ஒரு நாள் குறிக்கப்பட்டு பசியால் மாளும் மக்களின் பட்டியலை சர்க்காருக்குத் தர வேண்டும். அந்த நாள் சர்க்காரின் மந்தப் போக்கைக் குறைக்கு மென்ற நம்பிக்கையோடு இதைச் செய்யலாமா. செய்யக் கூடாதா என்ற முடிவை செய்யலாமென் றால் நாள் குறிப்பிடுங்கள் என்ற தாழ்மையான வேண்டுகோளை மத்ய கழகத்தின் முன் வைக்கிறேன். நம்முடை கிளர்ச்சிகள் என்றும் தோற்றதில்லை அடக்குமுறைகளை வீசிய போதும் - சிறைச்சாலை யிலே அடைத்தபோதும் - சிரச்சேதம் சிரச்சேதம் செய்வோம் என்று மிரட்டியபோதும் நாம் பயந்து பின்னடைந்தது இல்லை. - - அந்த அஞ்சா நெஞ்சத்துடன் - அழகிரிசாமியை நினைத்துக்கொண்டு அண்ணாவின் படை வரிசையிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/156&oldid=1703705" இலிருந்து மீள்விக்கப்பட்டது