உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 தினம் நாம் கொஞ்சம் அறிவோடு நடந்து கொண் டோமானால், நிச்சயம், "இடமில்லை பள்ளியிலே" என்று சொல்லக்கூடிய நிலையில் தலைமை ஆசிரிய ரும்; அத்தகைய இட வசதி செய்து தரமுடியாத நிலையில் நாமும் இல்லாமல் இட மிருக்கிறது நீங்கள் கேட்ட இடம் தந்திருக்கிறோம். பிள்ளைகளை யும் அனுப்பி யிருக்கிறோம். இவ்வளவையுந் தந்தி ருக்கிறோம் நீங்கள் கற்றுத்தந்த பாடங்கள் என்ன?" என்று நாம் கேட்கிற நிலையிலே மாற வேண்டு மென்றுதான் நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். ஆகவே இந்த வகையில் கல்வி வளர நாம் நம் முடைய பள்ளியை வளர்ச்சி பெறச் செய்து-வளர வேண்டிய எதிர்கால சமுதாயத்தை இளைஞர் குழாத்தை வெற்றிப் பாதையை நோக்கி நடத்திச் செல்ல ஆவன செய்வோம். - இந்த அளவில் தலைமையாசிரியரின் குறையோ வியத்தை விட்டு விட்டு, எனக்குத் தந்திருக்கும் தலைப்புக்கு வருகிறேன். 'குறளோவியம்" என்ற தலைப்பில் இந்த இலக்கிய மன்றத்தின் சார்பில் பேசப்படுகின்ற நேரத்தில் நம் தலைவரவர்கள் குறிப் பிட்டதுபோல, நான் ஏதோ புதிய புதிய விஷயங்கள் சொல்லப் போகிறேன் என்றோ, திருக்குறள் இந்த நாட்டிலே மக்களிடையே செல்வாக்குப் பெறாத ஒரு நூல்; அதை நாமெல்லாம் எடுத்துச் சொல்லித்தான் இனி அதற்குப் புதிய செல்வாக்கு வளருமென்றோ நான் குறிப்பிட விரும்பவில்லை...... திருவள்ளுவர் நமக்குத் தந்திருக்கிற குறள்பாக் கள் - அவற்றிலே சொல்லப்பட்டிருக்கிற அறிவுரை கள் தமிழர்கள் ஏகமனதாகப் பாராட்டக்கூடியனவா - 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/37&oldid=1703224" இலிருந்து மீள்விக்கப்பட்டது