உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன குறளது ? 42 ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின் ” ஊரிலே ஆண்டு கொண்டிருக்கிற அரசன் மக் களைச் சரியாகச் காப்பாற்றாவிட்டால் என்ன நேரும்? வள்ளுவர் சொல்லுகிறார். "ஆபயன் குன்றும் என்று. ஆபயன் என்றால், 'ஆ' என்ற ஒரு எழுத்துக்குப் பொருள்-ஆகவேண்டிய ! ஆபயன் குன்றும் என்றால் ஆகவேண்டிய காரியங்கள் ய ஆகாது. ஏன்? காவலன் காவானெனின் - செங்கோல் சரியாக நடை பெறாவிட்டால், மன்னன் சரியானபடி ஆட்சிக்கயிற் றைக் கையில் பிடித்திராவிட்டால், ஆபயன் குன்றி விடும். ஆகவேண்டிய காரியங்கள் கெட்டுவிடும். அறுதொழிலோர் நூல் மறப்பர் ஆறுவகையான தொழில்களைச் செய்யவேண்டியவர்கள், தங்களுடைய வித்தைகளை யெல்லாம் மறந்துவிடுவர். - காவலனு டைய பொறுப்பற்ற தன்மையால் என்று வள்ளுவர் குறிப்பிட்டிருக்கிறார். ய 66 புதிய பொருள் எழுதியவர்கள் என்ன சொல்லு கிறார்கள் ? ஆபயன் குன்றும்" என்றால் - ஆட்சி சரியாக நடைபெறாவிட்டால், "ஆ" என்றால் பசுமாடு. " பயன் குன்றும்" என்றால் - பால் கொடுக்காது- பசுமாடு பால்கொடுக்காதாம்! ஆட்சி சரியாக நடை பெறாவிட்டால்! நம்முடைய நாட்டிலே பசுமாடு பால் கொடுக்காமலா இருக்கிறது ? ஹிட்லர் ஆண்ட நாட் டிலே பசுமாடு பால் கொடுக்காமலா இருந்துவிட் டது ? முசோலினி ஆண்ட நாட்டிலே பசுமாடு பால் தரமாட்டேன் என்றா சொல்லிவிட்டது? இவர்கள் தங்கள் தமிழறிவை இழுத்து வளைத்துக் காட்டி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/42&oldid=1703229" இலிருந்து மீள்விக்கப்பட்டது