உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 எழுந்த வழக்கு உயர் நீதிமன்றம் சென்று, அங்கு அளிக்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக மக்களுக்கு வேதனையை உண்டாக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுள் ளதை யாவரும் மறந்துவிட முடியாது. மறுத்துவிட வும் முடியாது. விவசாயிகள் வீடுகளில், தங்கள் மனைவி, மக்களுடன் வேதனையடைந்து புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். குமுறிக்கொண்டிருக்கிறார் கள் என்பதை நான் இங்கே எடுத்துச்சொல்ல ஆசைப் படுகிறேன். இந்த நியாய வாரச்சட்டத்தின் காரண மாகக் குளித்தலைத் தொகுதி-நங்கவரம் பகுதியிலும் திம்மாச்சிபுரம் பகுதியிலும் விவசாயிகள் எந்த அள விற்குக் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்ப தைத் தினம் தினம் பத்திரிகைகளில் வரும் செய்தி களைக் கண்டும், விவசாயிகள் பகுதியில் எழுப்பப்படு கின்ற கூக்குரலைக் கண்டும் எந்த முறையில் அங்கு ற நிலைமை இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள லாம். திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அங்கே கையேர் வாரம்; என்றும் - மாட்டு ஏர் வாரம் என்றும் இரண்டுவித 'வாரம்' இருக்கிறது. இப்படி இரண்டுவிதமான வாரம் இருப்பதின் காரணமாக அவர்களுக்கு இந்த நியாய வாரச்சட்டம் பயன்படக் கூடாது என்று கருதி-அதை விவசாயிகள் பயனடை யாத வகையில் உயர்நீதிமன்றத்திற்குச் சென்று அங்கு தீர்ப்பு வாங்கியிருக்கிறார்கள். அந்தத் தீர்ப் பின் காரணமாக விவசாயிகள் நியாயவாரச் சட்டத் தின் பயனை அடைய முடியாமலும், வெளியேற்றத் தடுப்புச் சட்டத்தின் பயனை அடைய முடியாமலும் இருக்கிறார்கள். இன்றைய தினம் உயர்நீதி மன்றத் தில் தீர்ப்பு அந்த ரீதியில் வழங்கியிருக்கிறது. அதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/56&oldid=1703243" இலிருந்து மீள்விக்கப்பட்டது